முகப்புmollywood

ஷூட்டிங்கை 23 நாட்களில் நிறைவு செய்த நித்யா மேனன் படம்

  | September 10, 2018 15:00 IST
Praana

துனுக்குகள்

  • த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படம் 4 மொழிகளில் தயாராகுகிறது
  • வி.கே.பிரகாஷ் இயக்கும் இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது
பிரபல நடிகை நித்யா மேனன் கைவசம் வி.கே.பிரகாஷின் ‘பிராணா’ (Praana) மற்றும் மிஷ்கினின் ‘சைக்கோ’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘பிராணா’ படத்தின் கதைக்களம் ஒரே ஒரு கேரக்டரை சுற்றி நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதாம்.

த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் தயாராகுகிறது. ராஜேஷ் ஜெயராமன் ஸ்க்ரிப்ட் எழுதியுள்ள இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனராக பணியாற்றுகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கை 23 நாட்களில் நிறைவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்