விளம்பரம்
முகப்புmollywood

நிவின் பாலியின் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  | July 06, 2018 11:17 IST
Kayamkulam Kochunni

துனுக்குகள்

  • ‘காயம்குளம் கொச்சுண்ணி’யின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது
  • இதில் நிவினுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் இதனை ‘ஸ்ரீ கோகுலம் மூவீஸ்’ தயாரிக்கிறது
கேரளாவில் புகழ் பெற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு மலையாளத் திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என டைட்டிலிட்டுள்ள இதில் ஹீரோவாக ‘ப்ரேமம்’ புகழ் நிவின் பாலி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், இதிக்கரா பக்கி என்ற கதாபாத்திரத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் நடித்துள்ளார்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் இதனை ‘ஸ்ரீ கோகுலம் மூவீஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கோபி சுந்தர் இசையமைத்து வரும் இதற்கு பினோத் பிரதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 
இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நிவின் பாலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. வெகு விரைவில் படத்தின் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்