முகப்புmollywood

161 நாட்கள் நடந்த ‘காயம்குளம் கொச்சுண்ணி’ பட ஷூட்டிங் ஓவர் - நிவின் பாலி ட்வீட்

  | June 02, 2018 14:13 IST
Nivin Pauly

துனுக்குகள்

  • ‘காயம்குளம் கொச்சுண்ணி’யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுகிறது
  • இதில் நிவினுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் டூயட் பாடி ஆடுகிறார்
  • ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் இதனை ‘ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கிறது
கேரளாவில் புகழ் பெற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு மலையாளத் திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என டைட்டிலிட்டுள்ள இதில் ஹீரோவாக ‘ப்ரேமம்’ புகழ் நிவின் பாலி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் டூயட் பாடி ஆடுகிறார். மேலும், இதிக்கரா பக்கி என்ற கதாபாத்திரத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் நடிக்கிறார்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் இதனை ‘ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கோபி சுந்தர் இசையமைத்து வரும் இதற்கு பினோத் பிரதன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானது.
 
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை நிவின் பாலியே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்