முகப்புmollywood

விரைவில் துவங்கவிருக்கும் நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ ஷூட்டிங்

  | July 09, 2018 15:03 IST
Love Action Drama Movie

துனுக்குகள்

  • இதில் நிவினுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கவுள்ளார்
  • ஷான் இசையமைக்கவுள்ள இதில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்
  • இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
மலையாளத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்த தியான் ஸ்ரீனிவாசன் இயக்குநராக களமிறங்கும் படம் ‘லவ் ஆக்ஷன் டிராமா’. இப்படத்தில் ஹீரோவாக ‘ப்ரேமம்’ புகழ் நிவின் பாலி நடிக்கவுள்ளார். நிவினுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளாராம்.

இதில் தினேஷன் என்ற கதாபாத்திரத்தில் நிவினும், ஷோபா என்ற கேரக்டரில் நயனும் நடிக்கவுள்ளனர். ஷான் ரஹ்மான் இசையமைக்கவுள்ள இதற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். ‘ஃபன்டேஸ்ட்டிக் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘M-ஸ்டார்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சமீபத்தில், இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் படத்தின் கம்போஸிங் பணியை துவங்கினார். தற்போது, படத்தின் ஷூட்டிங்கை சென்னையில் வருகிற ஜூலை 14-ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்