முகப்புmollywood

அட... ஃபஹத் பாசிலா இது!!

  | February 13, 2018 16:58 IST
Fahadh Faasil

துனுக்குகள்

  • ஃபஹத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகர்
  • `வேலைக்காரன்' படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்
  • விளம்பரப்படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகிவருகிறது
தொடர்ந்து தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் நடிகர் ஃபகத். இவர் தமிழில் அறிமுகமான `வேலைக்காரன்' மூலம் இங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருக்கும் `சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் நடித்திருக்கிறார்'. 

திடீரென இவர் பராஸ்தடிக்ஸ் மேக்கப் போட்டு பருமனான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களின் சுற்றிக் கொண்டிருந்தன. என்ன என்று தேடிப் பார்க்கையில் அது ஒரு சூரியகாந்தி எண்ணைக்கான விளம்பரப்பட மேக்கிங் வீடியோ என்ற விவரம் கிடைத்தது. இதற்கு முன் ஃபகத் நடித்த மில்மா பால் விளம்பரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது இந்த விளம்பரப்படத்தில், ஃபஹத் இரண்டு வேடங்களில் இருக்கும் புகைப்படங்கள் பரபரப்பாக இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கிறது. 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்