முகப்புmollywood

காதலர் தின ஸ்பெஷலாக ப்ரியா வாரியர் நடித்திருக்கும் 'ஒரு அடார் லவ்' டீசர்

  | February 13, 2018 20:08 IST
Oru Adaar Love

துனுக்குகள்

  • `ஒரு அடார் லவ்' படத்திலிருந்து வெளியிடப்பட்ட பாடல் இது
  • இதில் நடித்திருக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியாரின் ரியாக்ஷன் வைரலாகியிருக்கி
  • இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது
'ஹேப்பி வெட்டிங்', 'சங்க்ஸ்' ஆகிய படங்களை இயக்கியவர் ஓமர் லுலு. இவர் தற்போது இயக்கியிருக்கும் படம் 'ஒரு அடார் லவ்'. இப்படத்தின் ஒரு பாடலான மாணிக்ய மலராய பூவி கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டது. இதற்கு முன் வைரலான ஜிமிக்கி கம்மல் பாடலைப் பாடிய வினித் ஸ்ரீநிவாசன், இசையமைத்த ஷான் ரஹ்மான் இருவரின் கூட்டணியில்தான் இந்தப் பாடலும் உருவாகியிருக்கிறது.

வெளிவந்த சில மணிநேரங்களில் அதில் நடித்திருந்த ப்ரியா வாரியாரின் ரியாக்ஷன்கள் ஃபேஸ்புக் டைம்லைன், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டகிராம் வீடியோ எனப் பல்வேறு சமூக வலைத் தளங்களிலும் ஷேர் செய்யப்பட்டு வைரலானது. கூடவே அந்த வீடியோவைக் கலாய்த்து மீம்களும் வீடியோக்களும் கூட ட்ரெண்டாகி வருகிறது.
 

இப்போதும் யூட்யூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்திலிருக்கும் இப்பாடல், குறுகிய காலத்திலேயே எண்பத்தைந்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. பாடலைப் போலவே காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகியிருக்கும் இப்படத்தின் டீசரும் வைரலாகும் என எதிர்பார்த்து காத்திருக்கிறது படக்குழு.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்