முகப்புmollywood

நிவின் பாலியின் கால்ஷீட் டைரியில் இணைந்த புதிய படம்

  | December 29, 2018 15:49 IST
Nivin Pauly

துனுக்குகள்

  • நிவின் பாலி கைவசம் மூன்று படங்கள் உள்ளது
  • ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது
  • நிவின் பாலியின் புதிய படத்தை ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கவுள்ளார்
மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸின்‘காயம்குளம் கொச்சுண்ணி' படத்துக்கு பிறகு நிவின் பாலி கைவசம் தியான் ஸ்ரீநிவாசனின் ‘லவ் ஆக்ஷன் டிராமா', கீது மோகன்தாஸின் ‘மூத்தோன்' மற்றும் ஹனீஃப் அதேனியின் ‘மைக்கேல்' ஆகிய 3 படங்கள் உள்ளது.

இதில் ‘மைக்கேல்' மற்றும் ‘மூத்தோன்' ஆகிய இரண்டு படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகிறது. ‘லவ் ஆக்ஷன் டிராமா' படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க நிவின் பாலி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘Thuramukham' என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்