முகப்புmollywood

சந்தோஷ் சிவனுடன் கைகோர்த்த காளிதாஸ் ஜெயராம்

  | September 12, 2018 23:16 IST
தமிழில் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் காளிதாஸ். இவர் பிரபல நடிகர் ஜெயராமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ‘பூமரம்’ என்ற மலையாள படத்தில் காளிதாஸ் நடித்திருந்தார்.

தற்போது, காளிதாஸ் கைவசம் பாலாஜி தரணீதரனின் ‘ஒரு பக்க கதை’, ‘ப்ரேமம்’ அல்போன்ஸ் புத்திரன் படம், ஜீத்து ஜோசப் படம், மிதுன் மானுவேல் தாமஸின் ‘அர்ஜென்டினா ஃபேன்ஸ் கட்டூர்கடவு’, ஆஷிக் அபுவின் ‘வைரஸ்’ என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

இந்நிலையில், மற்றுமொரு புதிய மலையாள படத்தில் நடிக்க காளிதாஸ் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். இதில் காளிதாஸுடன் மஞ்சு வாரியர், சௌபின் ஷாஹிர், நெடுமுடி வேணு, அஜு வர்கீஸ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதன் ஷூட்டிங்கை அக்டோபர் 20-ஆம் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்