விளம்பரம்
முகப்புmollywood

"நான் நன்றாக உள்ளேன்" புன்னகையுடன் பதில் கூறும் சுரேஷ் மேனன்

  | March 14, 2017 13:37 IST
Celebrities

துனுக்குகள்

  • தமிழில் வெளியான புதிய முகம் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்
  • நடிகை ரேவதியின் முன்னாள் கணவர்
  • தான் நன்றாக இருப்பதை செல்ஃபி மூலம் தெரிவித்துள்ளார்
இயக்குநரும் நடிகருமான சுரேஷ் மேனன் மரணமடைந்துவிட்டார் என்று வெளிவந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் புன்னகையுடன் பதில்கூறியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ரேவதியின் முன்னாள் கணவரும், முன்னாள் இயக்குநருமான சுரேஷ் மேனன் இறந்துவிட்டதாக செய்தி பிரபல தொலைக்காட்சி ஒன்றிலும், ஒரு சில இணையதளங்களிலும் வைரலாக பரவியது. ‘புதிய முகம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இறந்துவிட்டார் என்று தேசிய இணையதளங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் சுரேஷ் மேனன்தான் இறந்துவிட்டதாக பல செய்தி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட தொடங்கினர்.

ஆனால், சில நிமிடங்களிலேயே ‘புதிய முகம்’ என்ற மலையாள திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தீபன் என்பவர்தான் இறந்துவிட்டதாகவும், அது, தமிழில் ‘புதிய முகம்’ படத்தை எடுத்த இயக்குநர் சுரேஷ் மேனன் அல்ல என்றும் செய்திகள் வெளியானது. இந்த செய்திகள் சுரேஷ் மேனனின் பார்வைக்கும் சென்றுள்ளது.
இது குறித்து சுரேஷ் மேனன் கூறும்போது.
 
suresh menon

நான் இறந்துவிட்டதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறு. இந்த செய்தியை கேட்டவுடன் முதலில் நான் என் முகத்தை கண்ணாடியில் உற்று பார்த்தேன். அந்த நொடியில் கண்ணாடியில் தெரிந்த என் முகம் என்னை பார்த்து சிரித்தது என்று கூறியுள்ளார். நான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரதம் இதோ உங்களுக்காக என்று கூறீ ‘செல்ஃபி’ ஃபோட்டோ ஒன்றை இணைத்தும் வெளியிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்