விளம்பரம்
முகப்புmollywood

மோகன்லால் Vs விஷால் – எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ‘வில்லன்’ டிரையிலர்

  | September 01, 2017 11:44 IST
Villain Movie Trailer

துனுக்குகள்

  • மோகன் லால் – உன்னிகிருஷ்ணன் காம்போவில் தயாராகும் 4-வது படம்
  • இப்படத்தில் விஷால், ஹன்ஷிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
  • இதன் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
மலையாளத்தில் ‘1971 பியான்ட் பாடர்ஸ்’ படத்திற்கு பிறகு மோகன் லால் நடித்த லால் ஜோஷ்ஷின் ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து மோகன் லால் கைவசம் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’, பிருத்விராஜின் ‘லூசிஃபர்’, வி.ஏ.ஸ்ரீகுமார் மேனனின் ‘தி மஹாபாரதா’ மற்றும் ‘ஒடியன்’ ஆகிய நான்கு படங்கள் உள்ளது. இதில் ‘வில்லன்’ படத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லாலுக்கு எதிராக மிரட்டலான வில்லன் வேடத்தில் ‘புரட்சி தளபதி’ விஷால் நடித்துள்ளார்.

மேலும், ஹன்சிகா, ஸ்ரீகாந்த், மஞ்சு வாரியர், ராஷி கண்ணா ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ புகழ் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு ‘4 மியூசிக்ஸ்’ இசைக்குழு இசையமைத்துள்ளது, சுஷின் ஷ்யாம் பின்னணி இசையமைத்து வருகிறார், ஷமீர் முஹமத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ராக்லைன் எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வரும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.


க்ரைம் த்ரில்லராக தயாராகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் டீஸர் ஏற்கெனவே படக்குழுவால் டிவிட்டப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இயக்குநர் உன்னிகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் டிரையிலரை வெளியிட்டுள்ளார். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்