முகப்புவிமர்சனம்

“அடங்கமறு” யாருக்கும் அடங்கவில்லை- அடங்கமறு விமர்சனம் - "Adanga Maru" Movie Review

  | Tuesday, January 08, 2019

Rating:

“அடங்கமறு” யாருக்கும் அடங்கவில்லை- அடங்கமறு விமர்சனம் -
 • பிரிவுவகை:
  ஆக்‌ஷன்
 • நடிகர்கள்:
  ஜெயம் ரவி, ராஷி கண்ணா, சம்பத்ராஜ்,முனீஸ்காந்த் அழகம்பெருமாள்,பொன்வண்ணன்
 • இயக்குனர்:
  கார்த்திக் தங்கவேல்
 • தயாரிப்பாளர்:
  சுஜாதா விஜயகுமார்.
 • பாடல்கள்:
  சாம் சி எஸ்.

இயக்குனர் கார்த்திக் தங்கராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் சாம் சி எஸ் இசையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அடங்கமறு.

காவல் துறையில் உதவி ஆய்வாளராக சேரும் சுபாஷ் (ஜெயம் ரவி) இளம்பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

தகுந்த ஆதாரங்களுடன் குற்றவாளிகளை கைது செய்தும் உயரதிகாரிகளின் அழுத்தத்தால் அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாமல் போகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் இந்த சமூகத்தில் உயர்நிலையில் இருக்கக்கூடிய பெரும் பணக்காரர்களின் மகன்களாக இருக்கிறார்கள்.

இதுவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வராத எங்களை கைது செய்து அழைத்து வந்ததற்கு நீ நிச்சயமாக உன் வாழ் நாளில் ‌ இந்நாளை மறக்க மாட்டாய் என்று எச்சரித்து விட்டு செல்கின்றனர். ஜெயம் ரவி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

ஜெயம் ரவியின் அம்மா அப்பாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக புதிதாக ஒரு வீடு ஒன்றை கட்டுகிறார். அந்த வீட்டிற்கு தன் அப்பா அம்மா அண்ணன் குடும்பம் செல்கிறது. ஜெயம் ரவியின் குடும்பம் கொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்து போகும் ஜெயம்ரவி தன் வேலையை ராஜினாமா செய்கிறார்.

தன் குடும்பத்தை கொன்றவர்களையும் இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த குற்றவாளிகளை, அவர்கள் பெற்ற அப்பாக்களே கொல்வார்கள் என்று தன் உயர் அதிகாரியிடம் சபதமேற்று வருகிறார்.

எப்படி குற்றவாளிகளை அவர்களின் அப்பாக்களை விட்டே கொல்கிறார் அதற்காக அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

சுபாஷின் காதலியாக அனிதா (ராசி கண்ணா) வருகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பெரிய அளவில் இருவருக்கும் டூயட் பாடல்களும் அதிகமான ரொமான்டிக் காட்சிகளும் இல்லை என்றாலும் கொஞ்ச நேரம் வரும் காதல் காட்சிகளில் இருவருமே கலக்கி இருக்கிறார்கள்.


சமீபத்தில் நடந்த மதுக்கடைக்கு எதிரான போராட்டங்களையும் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். மதுக்கடைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் அதை தடுப்பதற்காக காவல்துறை எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போக புதிதாக உதவி ஆய்வாளராக க்ரைம் பிரான்ஞ்சில் சேர்ந்திருக்கும் ஜெயம் ரவி எப்படி மாணவர்களை கையாள்கிறார் என்பதிலிருந்து தொடங்குகிறது திரைப்படம்.

இந்த காட்சிகள் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த மதுக்கடைக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை நினைவுபடுத்துகிறது. அதேசமயம் காவல்துறையில் உயர் அதிகாரிகளிடம் இருந்து வரும் அழுத்தம் எப்படியானது என்பதை பற்றியும் இத்திரைப்படம் வலுவாக பேசி இருக்கிறது.
ஓ பே தீ ஆர்டர். என்கிற வார்த்தைகளால் ஜெயம் ரவி எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிகிறது. உயரதிகாரிகள் குற்றம் செய்தவர்களின் பக்கம் நிற்பதை அறிந்து மனமுடைந்து போகிறார்.

தன்னுடைய உயர் அதிகாரி ஒருவர் நீ ஐபிஎஸ் படித்துவிட்டு எனக்கு ஆர்டர் போடு. அதுவரையில் நான் சொல்வதை நீ கேள் என்கிறார்.

வேலையை விட்டு வெளியேறும் ஜெயம் ரவி குற்றவாளிகளை கடத்தி நவீன தொழில்நுட்பம் மூலமாக எந்த எவிடன்ஸும்  ஏதும் இல்லாதவாறு ஒவ்வொருவரையும் அவர்கள் அப்பாக்களை வைத்தே கொள்கிறார்.

ஜெயம் ரவிக்கு ஆதரவாக எந்த சாட்சியமும் கிடைக்காததால் அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுகிறார்.
சில மாதங்களுக்குப் பிறகு ஐபிஎஸ் அதிகாரியாக மீண்டும் பதவியில் அமர்த்தப்படுகிறார்.

அந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் ஜெயம் ரவியிடம் பத்திரிக்கையாளர்கள் சட்டம் தன் கடமையை செய்யும் என்கிறீர்கள் இளம்பெண் கடத்தல் குறித்து புகார் அளிக்கப்பட்ட குற்றவாளிகள் கூண்டோடு கொல்லப்பட்டிருக்கிறார்கள் இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்கிறார்கள்.

சட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்காது என்பதை அறிந்துள்ள ஜெயம்ரவி தானே குற்றவாளிகளை கொன்று விட்டு கொலை செய்தவனை விரைவில் கண்டுபிடிப்போம் என்றும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என கூறுவதோடு படம் முடிகிறது.

முதல் அரைமணி நேரம் மெதுவாக சென்றாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகள் படத்தை விட்டு நகர விடாமல் பார்த்துக் கொள்கிறது. சாம் சி எஸ் இன் இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறது. சென்டிமெண்ட் காதல் அதிரடி ஆக்ஷன் என படம் முழுவதும் விறுவிறுப்பாக போகிறது. மொத்தத்தில் அடங்கமறு யாருக்கும் அடங்கவில்லை.
 

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்