முகப்புவிமர்சனம்

'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்பட விமர்சனம் - Chennai 2 Singapore Movie Review

  | Friday, December 15, 2017

Rating:

'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்பட விமர்சனம் - Chennai 2 Singapore Movie Review
 • பிரிவுவகை:
  ரொமான்டிக் காமெடி
 • நடிகர்கள்:
  கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன்
 • இயக்குனர்:
  அப்பாஸ் அக்பர்
 • எழுதியவர்:
  அப்பாஸ் அக்பர்
 • பாடல்கள்:
  ஜிப்றான்

சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான அப்பாஸ் அக்பர், 'வேட்டை' என்கிற டிவி சீரியஸ் மற்றும் வேறு சில குறும்படங்களாலும் சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் 2011ஆம் ஆண்டில் இயக்குனர் வெங்கட்பிரபுவை சந்தித்து, 'சென்னை 2 சிங்கப்பூர்' என்கிற தனது கதையை சொல்லி தயாரிக்குமாறு கேட்டார். ஆனால், அது கை கூடி வராததால் 2014ஆம் ஆண்டில் சத்யா (நடிகர் ஆர்யாவின் சகோதரர்) மற்றும் ஹெபா பட்டேலை வைத்து தன் சொந்த தயாரிப்பிலேயே படத்தை தொடங்கினார். படம் தொடங்கி கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் சத்யா இப்படத்திலிருந்து வெளியேறினார். இந்நிலையில் இசையமைப்பாளர் கிப்ரான் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த Media Development Authority தயாரிப்பில், 2015ஆம் ஆண்டில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து மீண்டும் புதிதாக  இத்திரைப்படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது.    

தான் இயக்குனராக வேண்டும் என்பதற்காக கோகுல் ஆனந்த் தயாரிப்பாளரிடம் சொல்லிவைத்திருந்த கதையை வைத்து வேறொரு இயக்குனர் படம் ஆரம்பித்துவிட, வெளிநாட்டில் உள்ள தன் நண்பனுக்கு தெரிந்த தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க சிங்கப்பூர் செல்கிறார் கோகுல். சென்ற இடத்தில் தயாரிப்பாளருக்கு விபத்து ஆகிவிட, கோகுல் தனது பாஸ்போர்ட்டையும் தொலைத்துவிட்டு நிற்கிறார். தனது பாஸ்போர்ட்டை கண்டுபிடிக்கும் வரையில் சிங்கப்பூரிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில், தன்னைப் போலவே ஒரு பெரிய பிரச்சினையில் இருக்கும் அஞ்சு குரியனைப் பார்த்ததும் காதல் வயப்படுகிறார். பின்வரும் நாட்களில், இவர்களது பயணம், நட்பு, காதல், குறும்பு, கேலி, சோகம் என இவர்களது வாழ்க்கை பேசும் திரைப்படமே ‘சென்னை டூ சிங்கப்பூர்’.

பெரிய நடிகர்கள் மற்றும் மற்ற ஆடம்பர செலவுகள் ஏதுமின்றி, ஆர்ப்பாட்டமின்றி ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் அப்பாஸ் அக்பர். ஆனால், வலுவில்லாத (கதாபாத்திரங்களின் உணர்வுகளை தொடர்புபடுத்திக்கொள்ள முடியாத) காட்சிகள் மற்றும் அமெச்சூர் இயக்கத்தால், பல காட்சிகளை ரசிக்க முடியாமல் போகிறது. படம் தொடங்கியவுடன் வரும் அம்மா – மகன் சென்டிமெண்ட் காட்சிகளில் தொடங்கி, கையில் காசில்லாமல் பொது தொலைபேசியில் காசு போடாமல் தனக்குத்தானே அம்மாவிடம் பேசிக்கொள்வதைப் போல் பேசுவதைப் போல பல சினிமாத்தனமான காட்சிகள் படத்தில் உண்டு. ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் கூட, பல சமயங்களில் அதிகப்படியான மெலோ-டிராமாவால் திகட்டுகிறது. 
        
‘சென்னை டூ சிங்கப்பூர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் மற்றும் அடையாளம் – இப்படத்தின் சூப்பர் ஹிட் பாடல்களே! ஒவ்வொரு பாடலுமே ஒவ்வொரு வகையாக மனதில் இடம் பிடிக்கிறது – ‘வாடி வாடி’, ‘ரோ ரோ ரோஷினி’, தயாரிப்பாளருக்கு விபத்து ஆகிவிட, கோகுல் தனது பாஸ்போர்ட்டையும் தொலைத்துவிட்டு நிற்கிறார். தனது பாஸ்போர்ட்டை கண்டுபிடிக்கும் வரையில் சிங்கப்பூரிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில், தன்னைப் போலவே ஒரு பெரிய பிரச்சினையில் இருக்கும் அஞ்சு குரியனைப் பார்த்ததும் காதல் வயப்படுகிறார். பின்வரும் நாட்களில், இவர்களது பயணம், நட்பு, காதல், குறும்பு, கேலி, சோகம் என இவர்களது வாழ்க்கை பேசும் திரைப்படமே ‘சென்னை டூ சிங்கப்பூர்’.

பெரிய நடிகர்கள் மற்றும் மற்ற ஆடம்பர செலவுகள் ஏதுமின்றி, ஆர்ப்பாட்டமின்றி ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் அப்பாஸ் அக்பர். ஆனால், வலுவில்லாத (கதாபாத்திரங்களின் உணர்வுகளை தொடர்புபடுத்திக்கொள்ள முடியாத) காட்சிகள் மற்றும் அமெச்சூர் இயக்கத்தால், பல காட்சிகளை ரசிக்க முடியாமல் போகிறது. படம் தொடங்கியவுடன் வரும் அம்மா – மகன் சென்டிமெண்ட் காட்சிகளில் தொடங்கி, கையில் காசில்லாமல் பொது தொலைபேசியில் காசு போடாமல் தனக்குத்தானே அம்மாவிடம் பேசிக்கொள்வதைப் போல் பேசுவதைப் போல பல சினிமாத்தனமான காட்சிகள் படத்தில் உண்டு. ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் கூட, பல சமயங்களில் அதிகப்படியான மெலோ-டிராமாவால் திகட்டுகிறது. 
        
‘சென்னை டூ சிங்கப்பூர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் மற்றும் அடையாளம் – இப்படத்தின் சூப்பர் ஹிட் பாடல்களே! ஒவ்வொரு பாடலுமே ஒவ்வொரு வகையாக மனதில் இடம் பிடிக்கிறது – ‘வாடி வாடி’, ‘ரோ ரோ ரோஷினி’, ‘போகாதே’ என எல்லா பாடல்களுமே அருமையாக படமாக்கப்பட்டும் இருந்தது. கொஞ்சம் ஓவர்டோஸாக இருந்தாலும் கூட, படம் முழுக்க ஆங்காங்கே வசனங்கள் ஈர்க்கிறது - ‘மனுஷங்களுக்கு இன்னொரு முகம் இருக்கு... அதை அவன் காட்ட மாட்றான், நீ பார்க்க மாட்ற’, ‘நாம எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும், நம்மளை விட அதிகமா கஷ்டப்படுறவங்க இருந்துட்டேதான் இருப்பாங்க’, ‘உன்கிட்ட என்ன இருக்குன்‌னு பார்க்குறதை விட்டுட்டு, என்ன இல்லைன்னே யோசிச்சுட்டு இருக்க...’, ‘சாகப்போறோம்ன்னு தெரிஞ்சதும், எல்லோரும் பயந்து போய் நல்லது பண்றாங்க... சாவுக்கும், நல்லதுக்கும் என்னங்க கனெக்ஷன்?’ போன்ற வசனங்கள் சில உதாரணம். 

இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் – தெளிவில்லாத திரைக்கதையும், நேர்த்தியில்லாத கதை சொல்லலும். இந்த படத்தை சீரியஸாக அணுகுவதா, இல்லை நகைச்சுவையாக மட்டுமே கொண்டு செல்வதா என முடிவெடுப்பதில் இயக்குனருக்கு பெரிய குழப்பம் இருந்திருக்கும் போல தெரிகிறது. பெரும்பாலான காட்சிகளில் வரும் நகைச்சுவைகளுக்கு சிரிப்பு வருவதற்கு பதிலாக, கடுப்பே வருகிறது. படத்தின் இறுதிக்கட்டத்தில் வரும் ‘செக்மேட்’ காட்சிகள் எல்லாம் ஏன் வருகிறது, எதற்காக வருகிறது என்பதே தெரியாத அளவிற்கு நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது.     

முதல் அரைமணி நேரத்திற்கு பின் கதாநாயகியின் அறிமுகத்திற்கு பின்னே தொடங்கும் கதை, எங்கே செல்கிறது என்றே தெரியாமல் கன்னாபின்னவென இரண்டாம் பாதியில் தடுமாறும் திரைக்கதை, கொஞ்சம் கூட நடிக்கத் தெரியாத துணை நடிகர்கள், ரத்தம் வருவது போன்ற காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மட்டமான கலர் சாயம் என பல பட்ஜெட் பிரச்சினைகள் என படத்திலுள்ள குறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 

கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன், அஞ்சு குரியன் ஆகிய மூன்று முக்கிய நடிகர்களுமே தங்கள் பங்கினை சரியாக செய்துள்ளனர். மற்ற நடிகர்களெல்லாம் ஓவர் ஆக்டிங் செய்து நம்மை கொல்கிறார்கள், அல்லது நடிக்கவே நடிக்காமல் சும்மா நிற்கிறார்கள். இவர்களை எல்லாம் பார்க்கையில், ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்விற்கு மாறாக ஒரு 2 மணிநேர டிவி சீரியல் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது.    

‘சென்னை டூ சிங்கப்பூர்’ - கதையாக கேட்கும்பொழுது ஒரு அழகான பயணம் போல தெரிந்தாலும், காதல், நகைச்சுவை, எமோஷன்ஸ் என எல்லாவற்றிற்குமே முக்கியத்துவம் இருந்தாலும், திரைமொழியில் வலுவில்லாத திரைக்கதையாலும் வேறு பல குறைகளாலும் பெரும்பாலும் தத்தளிக்கவே செய்கிறது. 

  


              


 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்