விளம்பரம்
முகப்புவிமர்சனம்

தாய்மையை போற்றும் எங்க அம்மா ராணி விமர்சனம் - Enga Amma Rani Review

  | Friday, May 05, 2017

Rating:

தாய்மையை போற்றும் எங்க அம்மா ராணி விமர்சனம் - Enga Amma Rani Review
 • பிரிவுவகை:
  டிராமா
 • நடிகர்கள்:
  தன்ஷிகா, நமோ நாராயணன்
 • இயக்குனர்:
  எஸ்.பனி
 • தயாரிப்பாளர்:
  முத்து கிருஷணன்
 • எழுதியவர்:
  எஸ்.பனி
 • பாடல்கள்:
  இளையராஜா

தமிழ் திரை உலகை பொறுத்தவரையில் இதுவரை எத்தனையோ களத்தை மையப்படுத்தி திரைப்படங்கள் உருவாகி இருந்தாலும் பேய்களை மையப்படுத்தியும் நோய்களை மையப்படுத்தியும் பல திரைப்படங்கள் உருவாகி அதில் பல வெற்றியையும் பெற்றது. அந்த வரிசையில் மற்றும் ஒரு பேய் படம் தான் எங்க அம்மா ராணி என்றாலும் படத்தில் பேய்க்கு நிகராக நோயும் போட்டி போட்டு நடித்துள்ளது.

கதை களம்:-

மலேஷியாவில் வசித்து வரும் தன்ஷிகாவின் கணவர் தொலைந்து போக தன்னுடைய இரட்டை பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் தன்ஷிகா. குழந்தைகளின் சந்தோஷமே தன்னுடைய சந்தோஷம் என்று இருந்த தன்ஷிகாவிற்கு தனது இரட்டை குழந்தைகளில் ஒருவர் இறந்துபோக துடித்து போகிறார், அந்த குழந்தையின் இறப்பிற்கு தானும் ஒரு காரணமாகிவிட்டேன் என்ற குற்ற உணர்வில் துடிக்கும் ஒரு மருத்துவர் தன்ஷிகாவிற்கு முன் வர இறந்து போன குழந்தைக்கு என்ன நோய் இருந்ததையும் கண்டுபுடிக்கிறார்.

அதே நோய் மற்றோரு குழந்தைக்கும் இருப்பதை அறிந்து காப்பற்ற நினைத்து தன்ஷிகாவிடம் கூற முதலில் அதனை புறந்தள்ளுகிறார், பின்பு சில அறிகுறிகளால் தன்ஷிகாவிற்கும் தனது குழந்தையை பாதித்து இருக்கும் நோய்களை பற்றி தெரியவர, அந்நோயிலிருந்து தனது குழந்தையை விடுவிக்க எவ்வளவு தூரம் போராடுகிறார் என்பதே கதை.

இரண்டாம் பாதியில் அக்குழந்தையின் மீது எதற்காக ஆவி புகுறுகிறது, அதன் நோக்கம் என்ன? என்ற பல கேள்விகளுக்கும் விடை உள்ளது.

கபாலி திரைப்படத்திற்கு பிறகு தன்ஷிகாவிற்கு மிகசிறந்த கதாப்பாத்திரம் இப்படத்தில் கிடைத்துள்ளது, இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று சொன்னால் யாராக இருந்தாலும் கொஞ்சம் யோசிப்பார்கள் ஆனால், தன்ஷிகா துணிந்து நடித்ததற்கு முதலில் எங்களுடைய வாழ்த்துக்கள். நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர், அந்த வரிசையில் தன்ஷிகாவிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஆனால் படத்தின் மைனஸே முழு படத்தையும் தன்ஷிகா மட்டுமே கட்டி இழுத்துள்ளார்.தன்ஷிகாவை தவிர பிற நமோ நாராயணன் மட்டும் தெரிந்த முகமாக உள்ளது.

இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரு பாடல்களுமே அருமை அதிலும் வா வா மக்களே இன்னொரு பயணம் பாடல் திரையில் பல இடங்களில் ஒலிக்கும் நேரத்தில் நம் கண்கள் கலங்குகிறது.

எடிட்டிங் ஏ.எல். ரமேஷ் :-

எடிட்டிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்திருக்க வேண்டும் இரு இடங்களில் காட்சிகள் ஜம்ப் ஆகிறது, ஒரு காட்ச்சிக்கும் மற்றோரு காட்சிக்கும் மாறும் தருணத்தில் சில சொதப்பல்களும் உள்ளது.

ஒளிப்பதிவு குமரன் & சந்தோஷ் குமார் :-

ஒளிப்பதிவில் கொஞ்சம் தரத்தை புகுத்தி இருந்திருக்கலாம், இருந்தாலும் பல இடங்களில் மனித உறவுகளின் வெளிப்பாட்டினை மிக நேர்த்தியாக திரையில் காண்பித்துள்ளார்.

இயக்கம் எஸ்.பனி

நல்ல கதைக்களம் சமூகத்திற்கு தேவையான மிகசிறந்த கதை அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் பதிய விரும்பிய கதையை இன்னும் அழுத்தமாக கூறியிருக்கலாம் என்பதே நம்முடைய கருத்து.

தயாரிப்பு முத்துகிருஷ்ணன்

மலேசிய வாழ் தமிழரான முத்துகிருஷ்ணனுக்கு தமிழகத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு முதல் வாழ்த்தும், இது போன்ற சமூக அக்கறை நிறைந்த திரைப்படத்தை எடுக்க துணிந்ததற்கு மற்றோரு வாழ்த்தும் தெரிவித்து கொள்வோம்.

மொத்தத்தில் தமிழ் திரையுலகை தற்போதை டிரண்டான பேய் மற்றும் நோய் மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் தாய்மை என்ற உன்னதமான உறவை கூறுகிறது எங்க அம்மா ராணி.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்