முகப்புவிமர்சனம்

ரத்தம் தெறிக்க சினமே தீயாய் மாறும் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – விமர்சனம்

  | Saturday, April 13, 2019

Rating:

ரத்தம் தெறிக்க சினமே தீயாய் மாறும் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – விமர்சனம்
 • பிரிவுவகை:
  ஆக்ஷன் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  பிரியங்கா ரூத்,டேனியல் பாலாஜி,அசோக்,வேலு பிரபாகரன்,ஆடுகளம் நரேன்,பகவதி பெருமாள்,ஈ.ராமதாஸ்,பி. எல் .தேனப்பன்.
 • இயக்குனர்:
  சி.வி.குமார்
 • பாடல்கள்:
  ஹரி டப்யூசியா

வந்தவர்களை எல்லாம் வாழவைக்கும் சென்னை. பல்வேறு கிராமங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் படையெடுத்து வரும் மக்கள் இங்கு எதைத் தேடி அலைகின்றனர். புகழ், பணம், மரியாதை இவற்றக்காக இங்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எதார்த்தம். எப்போது பரபப்பாக இருக்கும் சென்னையில்தான் ஒவ்வெரு தனிமனிதனின் வாழக்கையிலும் தலையிடும் ஒரு பெரும் பிரச்னை அவனது வாழ்கையையே புரட்டி போட்டுவிடுகிறது. அப்படி தன் வாழ்கைகையே புரட்டிப்போட்ட பிரச்னையை எதிர்த்து போராடும் ஒரு இளம் பெண்ணின் கதைதான் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்.

கல்லூரியில் படிக்கும் போது சாய் பிரியங்கா ருத், அசோக்கை காதலிக்கிறார். வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்பு தெரிவிக்க அசோக்கை மதம் மாறி திருமணம் செய்துக்கொள்கிறார் பிரியங்கா. எல்லா மனிதர்களையும் போல இவர்களின் வாழ்வும் இயல்பாக நகர்கிறது. அசோக் ஒரு போதைப்பொருள் கடத்தில் கும்பல் நடத்தும் கம்பெணி ஒன்றிற்கு கணக்காளராக வேலைக்கு சேர்கிறார். இவர்கள் கடத்தல் தொழில் செய்கிறார்கள் என்பது அசோக்கிற்கு தெரியாது.

17an2038

இந்த நிலையில், ஒரு நாள் அவர்கள் கொடுத்த வேலைக்காக மும்பை சென்று திரும்பும் அசோக் தன் வீட்டு வாசலிலே காவல் துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுகிறார். எந்த தவறும் செய்யாத தன் கனவரை போலீசார் ஏன் சுற்றுக்கொன்றனர். தன் கனவர் தவறு செய்திருக்கிறார் என்றால் அந்த வேலையை செய்யச்சொன்ன முதலாளியும் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்தானே என்று அதற்கான காரணத்தை தேடி கண்டுபிடிக்கிறார் சாய் பிரியங்கா. தன் கணவனின் கொலைக்கு காரணமானவர்களை தீர்த்துக்கட்ட மும்பையில் இருக்கும் இன்னொரு ரவுடியான டேனியல் பாலாஜியின் உதவியை நாடுகிறார். அவரிடம் நன்கு பயிற்சி பெற்று சென்னை வரும் பிரியங்கா தன் எதிரிகளை பழிவாங்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

kkqeg7m

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேலுபிராபாகரன் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து பாராட்டுகளை பெறுகிறார். சில நேரம் மட்டுமே வந்து போகும் அசோக் படம் முடியும்வரை பார்வையாளர்களின் மனதில் நிற்கிறார். சென்னையில் போதைப்பொருள் தொழிலை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர நினைக்கும் இன்னொரு கூட்டத்தின் தலைவனாக டேனியல் பாலாஜி படத்திற்கு வலு சேர்க்கிறார். படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் கடந்து படத்தின் நாயகியாக வலுவான இடத்தை பெறுகிறார் சாய் பிரியங்கா ருத். நேர்மை, கோபம், காதல் என அனைத்தையும் தனது இயல்பான நடிப்பால் நாம் அன்றாடம் கடந்துசெல்லும் ஒரு கதாபாத்திரமாக திரையில் தோன்றுகிறார். தன் கனவனை கொன்றவர்களை பழிவாங்கும் இவரின் கோபம் கொடூர கொலைகாரியாக மாற்றுவதில் இருந்து அன்பும், பரிதாபமும் கொண்ட இன்னொரு இவரின் இன்னொரு முகத்தாலும் கவனத்தை ஈர்க்கிறார். இது பெரும் சவாலான ஒரு கதாபாத்திரம் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாரு நடித்து படம் முழுவதும் தன்னுடைய கதாபாத்திரத்தை தக்கவைத்திருக்கிறார்.

amtcgjho

படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதற்கு ஏற்றவாறு, படம் முழுவதும் ரத்தம் தெறிக்கிறது. கொடூரமான கொலைகளுக்கு காரணம் என்ன, யார் இந்த போதைப்பொருள் குண்டர்கள், என்று தெரிந்தும் மந்திரியின் தலையீட்டால் கும்பலை பிடிக்க முடியாமல் தவிக்கும் காவல்துறையினர்கள் வரும் காட்சிகள் சம கால அரசியல் வாதிகளால் காவல் துறையினர் எவ்வாறு தன் கடமையில் இருந்து தவறுகிறார்கள் என்பதை காட்டுகிறது.

lgv42d4

“என் வயிற்று பசிக்கு நீங்கள் சாப்பிட முடியாது”, “ இங்கு எனக்கு எது தேவையோ அதை நான்தான் கேட்க வேண்டும்”, “ இரண்டு சாமியையும் கும்பிட்டேன எந்த சாமியும் என்னை காப்பாற்ற வரவில்லை” போன்ற வசனங்கள் கைதட்டல்களை பெறுகிறது. இங்கு எது தேவையோ அதுவே நியாயம் என்று பேசும் வசனங்கள சர்ந்தப்பங்களை கொண்டு நியாப்படுகிறது என்பதை உணர வைக்கும் வசனங்கள் பல யேசிக்க வைக்கிறது.

nb2j88d8

பிரியங்காவை பயன்படுத்தி தன் தொழிலை தக்க வைக்க நினைக்கும் டேனியல் பாலாஜி, பிரியங்காவை வைத்து இரண்டு பேதைப்பொருள் கும்பலையும் கொல்லும் காவல் துறை, இந்த கதையை முடிக்க பிரிங்காவையும் முடிப்பதன் மூலம் காவல்துறையின் சுயநலம் என்னவென்பதை பேசுகிறது திரைமொழி. ஹரி டப்யூசியாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது. கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவு படத்தின் இன்னெரு பலமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ரத்தம் தெறிக்க சினம் தீயாய் மாறும் படம் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்