விளம்பரம்
முகப்புவிமர்சனம்

பக்தாள் அனைவரும் சவுக்கியமா? ஹர ஹர மஹாதேவகி விமர்சனம் - Hara Hara Mahadevaki Movie Review

  | Monday, November 20, 2017

Rating:

பக்தாள் அனைவரும் சவுக்கியமா? ஹர ஹர மஹாதேவகி விமர்சனம் - Hara Hara Mahadevaki Movie Review
 • பிரிவுவகை:
  அடுல்ட் காமெடி
 • நடிகர்கள்:
  கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், கருணாகரன், பால சரவணன், மொட்ட ராஜேந்திரன்
 • இயக்குனர்:
  சந்தோஷ் பி ஜெயக்குமார்
 • தயாரிப்பாளர்:
  ஸ்டுடியோ கிரீன்
 • எழுதியவர்:
  சந்தோஷ் பி ஜெயக்குமார்
 • பாடல்கள்:
  பாலமுரளி பாலு

முன்பு ஒரு காலத்திலே யூடியூபில் மட்டும் ஃபேமஸா இருந்த என்னை கழுத்துல துண்டபோட்டு இழுக்காத குறையா என் பக்தாள் ஒருத்தன் சின்ன திரையில வந்தது போதும் சாமி இனி பெரிய திரைக்கு வாங்கனு கூப்பிட்டா, நான் வரமாட்டேன்னு எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன், கதறி பார்த்தேன் ஆனா என் பக்தாள் என்ன விடுறமாதிரி தெரியல, நான் படத்தை பத்தி பேசுனேன்.

சரிடா அம்பி நான் படத்துல நடிக்க மாட்டேன் உனக்காக வேண்டி வாய்ஸ் ஓவர் வேணுனா கொடுக்குறேன் சொல்லி வாய் மூடல , நான் உங்கள நடிக்க கூப்புடலை உங்கள வச்சு படம் இயக்குர தையிரமும் இல்லை நீங்க எல்லாத்தையும் குளோஸ் பண்ணிட்டு வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுத்துட்டு போங்க சாமி அப்டினு பட்டுனு சொல்லிட்டேன்.

என்னடா இப்படி அசிங்கப்படுத்திட்டானே அப்படினும் நம்ம மனசுக்குள்ள கோபம் கனலா கொதிச்சாலும் அவன் நம்ம பக்தளாச்சே அப்டிங்கிறதுனால வேற வழியில்லாம ஓகே சொன்னேன்.

இனிமே படத்தோட கதை என்னனு பார்ப்போமோ...

படத்துல கதையில ஒண்ணுமில்லேடா அம்பி, வழக்கமான சினிமாவில வரமாதிரி ஒரு ஹீரோ, அந்த பையனுக்கு ஒரு மொக்க ஃபிரெண்டு அதே மாதிரி ஒரு ஹீரோயின் அந்த பொண்ணுக்கும் ஒரு மொக்க ஃபிரெண்டு ஒரு காமெடி அரசியல்வாதி அவனுக்கு ஒரு அல்லக்கை அவனுக்கு ரெண்டு டம்மி பீஸ் பாய்ஸ் (அதுல ஒருத்தருக்கு 60 வயசே தாண்டிடுச்சு) இவங்கள எல்லாத்தையும் ஒரு பேக் தான் ஒரு மையப்புள்ளிக்கு கொண்டு வந்து சேர்க்குது... "என்ன சாமி சொல்றிங்க ஒரு பேக்குனாலையாயாயா" ஹிம்ம்ம்ம்... பை, பை டா அம்பி, எப்போ பாரு அதே சிந்தனை... கதையில இருந்து ஜம்ப் ஆகாதே... வழக்கம் போல ஹீரோயின், ஹீரோ எசக்கு பிசக்கா ஒரு இடத்தில பாக்குறா திரும்பவும் பாக்குறா, திரும்பவும் பாக்குறா உடனே லவ் வந்துடுச்சு நல்லா போன காதல் பயணத்துல ஒரு சின்னதா ஒரு விரிசல் வருதுடா அம்பி...

இரண்டு பேரும் முடிவு செஞ்சு பிரிஞ்சிடலாம்னு போகும் போது இடையில வர பிரச்னை தான் இப்படத்தின் கதை, என்ன சாமி கதையே புரியல... எனக்கு மட்டும் புரிஞ்சு சொல்றேன் எதோ ஒரு ஃப்ளோல போகுது நானும் அதோட சேர்ந்து டிராவல் பண்ணேன் டா அம்பி...

சரி சாமி இனிமே இந்த ஆன்மீக பயணத்திற்கு துணை நின்றவர்கள் பத்தி பேசுவோமா... அதுக்கு தான் வரேண்டா அம்பி...

இந்த ஆன்மிக பயணத்தில்ல பயணம் செஞ்சவங்களே முதலில் நம்ம பாக்க போறது கேமரா மேன் செல்வகுமார் தான்...

சின்ன வயசா இருந்தாலும் பெருசா இருக்குடா.... திறமை... கேமராவை எந்த இடத்துல வச்சா நல்ல தெரியுமோ அந்த இடத்துல வச்சு அருமையா காட்சி படித்திருக்கான் இந்த அம்பி.... வருங்காலம் மிக அருமையாக இருக்கும்...

அதே போல எடிட்டிங் இசை பகுதிகளை கையில் எடுத்தவர்கள் மிக சிறப்பாக செயற்படுத்தி உள்ளார்கள் வாழ்த்துக்கள்.

இந்த படத்தின் மூலமா இந்த உலகத்திற்கு என்ன சொல்ல வராங்க சாமி ?

எதையும் சின்னதா ஆசை படாதே.. எதுவாக இருந்தாலும் பெருசா ஆசைப்படு என்று மிகப்பெரிய தத்துவத்தை மிக இயல்பா சொல்லிட்டான் டா அவன்.

யாரு சாமி அது ?

அது வேற யாருமில்லை என் பக்தாளே ஒருத்தவன் தான் 'சன்தோஷ்.பி.ஜெயக்குமார்'

எல்லாத்தையும் இரண்டாம் பாகத்துலே வந்து சந்திக்கிறேன்..

ஹர ஹர மஹாதேவகி.....

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்