விளம்பரம்
முகப்புவிமர்சனம்

இவன் 'கூட்டத்தில்' ஸ்பெஷலான 'ஒருத்தன்' விமர்சனம் - Kootathil Oruthan movie review

  | Friday, July 28, 2017

Rating:

இவன் 'கூட்டத்தில்' ஸ்பெஷலான 'ஒருத்தன்' விமர்சனம் - Kootathil Oruthan movie review
 • பிரிவுவகை:
  ரொமாண்டிக் காமெடி
 • நடிகர்கள்:
  அசோக் செல்வன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, அனுபமா குமார்
 • இயக்குனர்:
  T.J.ஞானவேல்
 • தயாரிப்பாளர்:
  எஸ் ஆர் பிரகாஷ்பாபு, எஸ் ஆர் பிரபு
 • எழுதியவர்:
  T.J.ஞானவேல்
 • பாடல்கள்:
  நிவாஸ் கே பிரசன்னா

இப்படத்தின் கதையை  சில வரிகளில் சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய பள்ளி பருவத்திலோ அல்லது கல்லூரி பருத்திலோ அடிக்கடி பார்த்த முகம் தான், குறிப்பாக கல்லூரிகளில் முதல் பென்ச் மற்றும் கடைசி பென்ச் என்று இரண்டு வகை இருப்பார்கள். இவர்களை பற்றி தான் இதுவரை வெளிவந்த தமிழ்  சினிமாக்கள் அதிகமாக பேசும், ஆனால், நடு பென்ச் (மிடில் பென்ச்) மாணவர்களை பற்றி இதுவரை யாருமே  பேசியதும்  இல்லை அவர்களை பற்றி படங்களும் வெளிவந்தது இல்லை.

அப்படி ஒரு நடு பென்ச் மாணவனின் கதை தான் இந்த 'கூட்டத்தில் ஒருத்தன்', நடிகர் அசோக் செல்வன், நடிகை பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, அனுப்பாம குமார் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஞானவேல் என்பவர் இயக்கி உள்ளார் டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பு  நிறுவனம்  சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்
 
கதாநாயகனான அசோக் செல்வனிடம் கதாநாயகி பிரியா ஆனந்த் " உன்னை நான் காதலிக்க வேண்டுமென்றால் நீ சாதிக்க வேண்டும் என்னை போல் எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றார்.

கதாநாயகி மனதில் இடம்பிடிக்க அசோக் செல்வன் செய்யும் வேலைகள், அதனால் அவர் சந்திக்கும் விளைவு, அதனை தொடர்ந்து அவர் எப்படி சாதித்தார்? இதில் சாதித்தார்? இருவரும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

நடிகர் அசோக் செல்வனின் நடித்த திரைப்படங்களிலேயே இது தான் அவருடைய பெஸ்ட் ஒரு மிடில் பென்ச் மாணவனுக்கான சகலபொருத்தமும் இவரின் முகத்தில் தெரிகிறது,  இவர் திரையில் தோன்றும் காட்சிகளாக இருந்தாலும் சரி கதாநாயகி பிரியா ஆனந்தை காதலிக்க இவர் சமுத்திரக்கனியின் உதவியை நாட, அதுவே அவருக்கே அது ஆபத்தாக மாற, பின் இரண்டாம் பாதியில் அவர் செய்யும் அனைத்து விஷயங்களும் இன்றைய இளைஞர்கள் பலருக்கும் ஊக்கம் தரும்.

அனைவருடைய நடிப்பும் மிக அருமை, இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் இந்த கதையை இயக்கிய இயக்குநர் ஞானவேல் ஆகியோர்க்கு நம்முடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வோம், 

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் அருமை,பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும் லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு கவனம் ஈர்க்கின்றது.

மொத்தத்தில் இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் மிகச்சிறந்த திரைப்படம் 'கூட்டத்தில் ஒருத்தன்'

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்