விளம்பரம்
முகப்புவிமர்சனம்

தவறு செய்பவர்களுக்கு சாட்டையடி குற்றம் 23 - திரைப்பட விமர்சனம்

  | Friday, March 03, 2017

Rating:

தவறு செய்பவர்களுக்கு சாட்டையடி குற்றம் 23 - திரைப்பட விமர்சனம்
 • பிரிவுவகை:
  மெடிக்கல் க்ரைம்
 • நடிகர்கள்:
  அருண் விஜய், மஹிமா நம்பியார், தம்பி ராமையா, வம்சி கிருஷ்ணா
 • இயக்குனர்:
  அறிவழகன் வெங்கடாச்சலம்
 • தயாரிப்பாளர்:
  இந்தர் குமார்
 • எழுதியவர்:
  ராஜேஷ் குமார்
 • பாடல்கள்:
  விஷால் சந்திரசேகர்

2009 – ஈரம், 2014 – வல்லினம், 2016 – ஆறாது சினம், அதனை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் அறிவழகன் தன் முத்திரையை தமிழ் சினிமாவில் மிக அழுத்தமாக பதிந்துள்ள திரைப்படம் இன்று நடிகர் அருன் விஜய் நடிப்பில் வெளியான குற்றம்-23.

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு அவர் தயாரிப்பு நிறுவனத்தாலயே இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுக செய்து வைக்கபட்டவர் இயக்குநர் அறிவழகன், தன் குருநாதரின் பெயரை எந்த சந்தர்ப்பத்திலும் கெடுத்து விட கூடாது என்ற வெறியுடன் போராடி வருபவர், தன் முதல் படத்திலேயே சமீபகால சீஸனாக இருக்கும் பேய் கதையையும் போலிஸ் கதையையும் மையமாக வைத்து ‘ஈரம்’ திரைப்படம் மூலம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார்.

அதன் பின் நடிகர் நகுலை வைத்து வல்லினம், நடிகர் அருள்நிதியை வைத்து ஆறாது சினம் என்ற திரைப்படங்களை இயக்கினாலும் தற்போது வெளிவந்துள்ள குற்றம் 23 திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையிலும், நடிகர் அருண் விஜய் சினிமா வாழ்க்கையிலும் நல்ல ஒரு படமாக நிச்சயம் அமையும்.


கதை கரு:-

செயற்கையாக கருத்தரித்தல் என்ற நவீன கால மருத்துவ வளர்ச்சியின் கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

இந்த மருத்துவ வளர்ச்சியை எப்படி வியாபாரமாக மாற்றுகிறார்கள், அதன் பின் நடக்கூடிய பிளாக் மெயில், பண பறிப்பு, கொலை, போன்ற காட்சிகளை மிகச்சரியாக கையாண்டுள்ளார் இயக்குநர். படத்தில் பல காட்சிகள் இயக்குநரின் முந்தய படங்களின் காட்சிகளை நினைக்கூர்ந்தாளும் படத்தில் தேவையில்லாத வசனங்கள், தேவை இல்லாத காட்சிகள் என்று எதையும் அவ்வளவு எழுதாக கூற இயலாது. அந்த அளவிற்கு அனைத்து துறைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி திறம்பட கையாண்டுள்ளார் இயக்குநர்.

தொழில்நுட்பம்:-

இப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், மிகவும் பாராட்டபட வேண்டிய ஒளிப்பதிவு இதற்கு முன்னதாகவே இயக்குநர் அறிவழகனுடன் இணைந்து வல்லினம் திரைப்படத்திலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தொகுப்பு புவன் ஸ்ரீநிவாசன் இவர் பணியாற்றிய அனைத்து திரைப்படங்களிலுமே குற்றம் 23 திரைப்படம் உட்பட அனைத்துளும் இவரும் ஒரு கதாநாயகனாகவே பார்க்கப்பட்டு வருகிறார். ஏன் என்றால் படத்தை கூர்மையான சரியான கத்தரிக்கோலை பயன்படுத்தி தேவையான அளவிற்கு மிக கச்சிதமாக வெட்டி கொடுப்பதில் கெட்டிக்காரர் என்றே கூறலாம். இப்படத்திலும் தனது கெட்டிக்காரத்தனத்தை சரியாக வெளிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன்னுடைய வேலையை சரியாக செய்துள்ளார்.

அருண் விஜய்:-

இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் சரியான படங்கள் அமையாததால் அருண் விஜய் போன்ற ஒரு திறமையான் கதாநாயகனை இழந்து வந்துள்ளதே கூறலாம். தன்னுடைய நடிப்பில், சண்டை காட்சிகளில், வசன உச்சரிப்பில் என அனைத்து விதங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிகாட்டியுள்ளார், மிக நீண்ட இடைவேளிக்கு பின் கதாநாயகனாக அருண் விஜய் கலக்கி உள்ளார்.இனிமேல் அவர் இது போன்ற நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதும் நமது அறிவுரை.

இவரை தவிர இப்படத்தில் கதாநாயகியாக மஹிமா நம்பியார், தம்பி ராமையா, வம்சி கிருஷ்னா, அரவிந்த் ஆகாஷ், விஜயக்குமார், அபிநயா உள்ளிட்ட அனைவரும் தங்களது பணியை மிகவும் சரியாக நடித்து முடித்துள்ளனர்.

படத்தின் மைனஸ்:-

இப்படத்தில் இடைவேளை வரை மிக வேகமாக நகர்ந்தாளும், அதன் பின் கொஞ்சம் மெதுவாக நகர்வது நம்மை இருக்கையில் நெலிய வைக்கிறது, குறிப்பாக ஃபிளாஷ்பேக் காட்சிகளை சுருக்கி இருக்கலாம் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் பாராட்ட பட வேண்டிய நல்ல திரைப்படமாக குற்றம் – 23 உருவாகியுள்ளதால் நம்முடைய பாராட்டை தெரிவித்துக் கொள்வோம்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்