விளம்பரம்
முகப்புவிமர்சனம்

தனி மனித சுதந்திரத்தை திருடும் கயவர்களை வெளிச்சம் போடும் 'லென்ஸ்' - Lens Review

  | Thursday, May 11, 2017

Rating:

தனி மனித சுதந்திரத்தை திருடும் கயவர்களை வெளிச்சம் போடும் 'லென்ஸ்' - Lens Review
 • பிரிவுவகை:
  திரில்லர் ட்ராமா
 • நடிகர்கள்:
  ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அனந்தசுவாமி, அஸ்வதி லால், மிஷா கோஷல்
 • இயக்குனர்:
  ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
 • தயாரிப்பாளர்:
  மினி ஸ்டுடியோ, வெற்றிமாறன்
 • எழுதியவர்:
  ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
 • பாடல்கள்:
  ஜி வி பிரகாஷ் குமார்

தமிழ் திரையுலகம் ஆரோக்கியமான வளர்சியைத்தான் பெற்று வருகிறது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது லென்ஸ் திரைப்படம். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் தயாராகியுள்ள இத்திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்பாக பல சர்வதேச விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு பல விருதுகளையும் பெற்றுள்ளது. இது போன்ற கதைக்களத்தை தேர்ந்தெடுத்தற்காக இயக்குநர் ஜெயப்ரகாஷ்க்கும், தயாரிப்பாளர் வெற்றி மாறன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளலாம்.

கதை களம் மற்றும் விமர்சனம்:

இன்றைய இயந்திர உலகத்தில் மிகவும் இயல்பாக போன சமூகவலைத்தளங்கள் நடைப்பெறும் குற்றங்களை பற்றிய கதை தான் லென்ஸ். பக்கத்து வீட்டில் யார் உள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்பாத சமூகத்தில் முகநூல் எனப்படும் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் யார் என்பது கூட தெரியாதவர்களிடம் தங்களின் அந்தரங்களை பகிர்ந்துக்கொள்ளும் முட்டாள்களையும் கண்டிப்பதோடு தங்களுடைய சபல புத்தியால் ஒரு அழகான குடும்பம் எப்படி சிதறுகிறது என்பதை மிக நேர்த்தியாகவும் தைரியமாகவும் கூறியுள்ளார்.

தங்கள் வீட்டு பெண்களை தவிர மற்ற பெண்களை தவறாக எண்ணுகின்ற அனைவரையும் கன்னத்தில் அறைந்துள்ளது லென்ஸ் திரைப்படம், எஸ்.ஆர்.கதிர் லென்ஸ் கண்கள் இப்படத்தை மிக நேர்த்தியாக திரையில் காட்டியுள்ளார், அனைத்து காட்சிகளையும் வேறு ஒரு புதிய கோணத்தில் காட்டியுள்ளது மிக சிறப்பு, அதன் பின் படத்தொகுப்பு பணியை கவுகின்,ஜெய்னுலாப்தீன்,ஜி.பி.வெங்கடேஷ் ஆகிய மூவரும் கவனித்துள்ளனர், எங்கும் சிறிது அளவு குறைக்கூட இல்லாமல் தெளிவாக திரையில் காட்டியுள்ளனர், குறிப்பாக எந்த இடத்தில் தொய்வு இல்லாமல் படத்தொகுப்பை நகரத்தியுள்ளனர், அடுத்ததாக இசை ஆங்கிலத்தில் சித்தார்த் விபினும் தமிழில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் இசையமைத்துள்ளார். இது போன்ற சமூக அக்கறைக்கொண்ட சிறிய அளவிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்ட ஜி.வி.பிரகாஷுக்கு தனியாக ஒரு பாராட்டுக்கள், ஏன் எனில் நல்ல கதைகளுடைய திரைப்படங்கள் வணிகரீதியில் வெற்றியடைவதில்லை, ஜி.வி. போன்றோர் இசையமைக்க ஒப்புக்கொண்டதற்காகவே மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தயாரிப்பு கிராஸ் ரூட் ஃபிலிம் சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார் எப்போதுமே மிகவும் தரமான படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர் என்பது இப்படத்திலும் நிரூபித்துள்ளார், காக்கா முட்டை போன்ற மிகசிறந்த படங்களை தயாரித்தும் விசாரணை போன்ற மிகசிறந்த திரைப்படங்களை இயக்கியும் தன் தலையில் நல்ல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற கிரீடத்தை சுமந்து கொண்டிருக்கும் வெற்றிமாறனுக்கு மேலும் ஒரு வைரக்கல் மோதிரமாக அமைந்துள்ளது லென்ஸ் திரைப்படம்.

இயக்கம் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன் :-

இப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்ற வெறி அவரிடம் நாம் பேசும்பித்தே தெரிந்தது பெரிய மெனக்கெடலுக்கு இடையே இப்படத்தை வெற்றிமாறன் உதவியுடன் வெளியிட்டுள்ளார் இயக்குநர், இது போன்ற கதையினை திரைப்படமாக எடுக்க திட்டமிடுவதற்கே தனி கட்ஸ் வேண்டும், நல்ல திரைப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் தானே நடித்துள்ளார். திரைக்கதை பிரமாதமாக அமைத்துள்ளார் ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்கள் மட்டுமே என்றாலும் கூட திரைக்கதை மிகவும் அழுத்தமாக உள்ளது.

ஜெய்பிரகாஷுடன் இணைந்து ஆனந்த் சுவாமி, அஸ்வதி லால், மிஷல் கோஷல் உள்ளிட்ட பலர் தங்களுடைய கதாப்பாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்துள்ளனர்

இறுதியாக இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து தமிழ் திரையுலகின் சார்பில் வெளிவரவேண்டும் என்பது அனைவரும் கோரிக்கையும் கூட.

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்