விளம்பரம்
முகப்புவிமர்சனம்

சென்னையின் பல முகத்தை பிரதிபலிக்கும் "மாநகரம்” – திரைப்பட விமர்சனம்

  | Friday, March 10, 2017

Rating:

சென்னையின் பல முகத்தை பிரதிபலிக்கும்
 • பிரிவுவகை:
  திரில்லர்
 • நடிகர்கள்:
  ஸ்ரீ,சந்தீப் கிருஷ்ணன், ரெஜினா, முனிஷ்காந்த் என்னும் ராமதாஸ், சார்லி, மதுசூதனன்
 • இயக்குனர்:
  லோகேஸ் கனகராஜ்
 • தயாரிப்பாளர்:
  எஸ்.ஆர்.பிரபு
 • எழுதியவர்:
  லோகேஸ் கனகராஜ்
 • பாடல்கள்:
  ஜாவித் ரியாஸ்

தலைப்பிற்கேற்ற மாதிரியே இப்படம் முழுக்க முழுக்க சென்னையை சுற்றியே நடக்கிறது. இரண்டு இரவுகள் ஒரு பகல் என்று திகில் கலந்த ஒரு பயணமாக உள்ளது ’மா நகரம்’ திரைப்படம்.36 மணி நேர அனுபவத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் சுறுக்கி கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ நடிகர் ஸ்ரீ, நடிகர் தனுஷிற்குப் பிறகு பள்ளிக்கூடப் சிறுவனாக, ஒரு மருத்துவக்கல்லூரி மாணவனாகவும், வேலைக்குப்போகும் இளைஞனாக என்று அனைத்து விதமான கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்திப்போகிற உடல்வாகுடன், கதாபாத்திரங்களுக் ஏற்ற உணர்வுகளை சிதறாமல் திரையில் வெளிகாட்டும் லாவகம் என தன் சினிமா பயணத்தில் அடுத்தடுத்த பரிணாமங்கள் எடுத்து வருகிறார். யார்? எதற்காக அடிக்கின்றார்கள்..? என்பது தெரியாமல் இவருக்கு ஏற்படும் அவஸ்தைகளை நினைத்தால் இவர் மீது உண்மையிலேயே பரிதாபப்பட வைக்கிறது. நடிகர் ஸ்ரீ, பெரிய இடத்திற்கு செல்லத் தகுதியான கதாநாயகன்.

நடிகர் சந்தீப் கிருஷ்ணன், யாருடா மகேஷில் அறிமுகமான இவர், இப்படத்தில் கை, கால்களை வில்லன்களிடத்திலும் , கண்களை காதலி ரெஜினாவிடத்திலும் பேச விட்டிருக்கிறார், பொதுவாகவே தெலுகு நடிகர்களுக்கு அல்லது இங்கிருந்து தெலுகில் சென்று நடிப்பவர்களுக்கென்று ஒரு வசீகரம் இருக்கும் , அது சந்தீப் கிருஷ்ணனிடம் மிகவும் இயல்பாக உள்ளது. நடிகை ரெஜினா, காதலனை பற்றிய கவலை மனதிற்குள் இருந்தாளும், தனது தோழியின் காதலனுக்கு வேலை வாங்கி கொடுக்க மெனக்கெடும் அழகிய ஹெச்.ஆர், ஆக வந்துபோகிறார்.

முனிஷ்காந்த் என்கிற நடிகர் ராமதாஸ், இந்த திகில் பயணத்தில் நம்மை கலகலப்பாக வைத்திருக்கும் முழு பொறுப்பும் இவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளனர் படக்குழு, அந்த வேலையை சரியாக செய்து முடித்துள்ளார். எதற்காக அந்த கும்பலில் இணைந்தாரோ அதைவிட அதிகமாக கிடைத்த பின்பும், அதை உதறிவிட்டு நடக்கும் போது, அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் வாங்கிவிடுகிறார். நடிகர் மதுசூதனன் மிரட்டும் வில்லனாக வந்தாலும், இறுதிக்காட்சியில் நல்லவனாக மாற வேண்டிய நிர்ப்பந்தம், தன்னுடைய மகன் மூலம்!

நம் கையில் எதுவுமே இல்லைங்க சார், நடப்பவை அனைத்திற்கும் இயற்கை அதற்கு ஒரு எல்லை ஏற்கனவே நிர்ணயித்துள்ளது. அந்த ஊரு என் வாழ்க்கையயே அழித்து விட்டது சார் என்று தயவு செய்து புலம்பாதீர்கள், அது உங்களது இயலாமை காட்டுகிறது. உங்களைத் சுமக்கும் ஊரை , நீங்கள் தான் பார்த்துக் கொண்டு அதற்கு பெருமை சேர்க்கவேண்டும்,என்ற கருத்தை மையமாக கொண்டு நடிகர் சார்லி பேசும் ஒவ்வொரு வசனங்கள் நம் கன்னத்தில் ஓங்கி அடித்தது போல் ஓர் உணர்வு.

மொத்தத்தில் வந்தாரை வாழவைக்கும் சென்னை என்ற பெருமையான மொழிக்கு பின்னால் பலரின் உழைப்பு உள்ளது, நீங்களும் கடினமாக உழையுங்கள் வெற்றி நிச்சயம் என்கிறது இப்படம்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்