விளம்பரம்
முகப்புவிமர்சனம்

இன்றைய சமூக அவலங்களை திரையில் காட்டும் 'நிசப்தம்' - திரைப்பட விமர்சனம்

  | Saturday, March 11, 2017

Rating:

இன்றைய சமூக அவலங்களை திரையில் காட்டும் 'நிசப்தம்' - திரைப்பட விமர்சனம்
 • பிரிவுவகை:
  விழிப்புணர்வு
 • நடிகர்கள்:
  அஜய், அபினயா, சாதன்யா, கிஷோர்
 • இயக்குனர்:
  மைக்கெல் அருண்
 • தயாரிப்பாளர்:
  மிராக்கிள் பிக்சர்ஸ்
 • எழுதியவர்:
  மைக்கெல் அருண்
 • பாடல்கள்:
  ஷவான் ஜசில்

கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தனது முதல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் மைக்கெல் அருண். இது போன்ற சமுக அக்கறை உள்ள கதையை தேர்ந்தெடுத்ததற்கு முதலில் இவருக்கு ஒரு பாராட்டை கூறிவிட்டு விமர்சனத்தை தொடங்குவோம்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் வாழ்ந்துவரும் அஜய்-அபினயா தம்பதிகயற்கு 8 வயதில் சாதன்யா என்றொரு மகள். நடிகர் அஜய் ஒரு பன்னாட்டு கார் கம்பெனியில் வேலை பார்ப்பவராகவும், நடிகை அபினயா தனது வீட்டுக்கு கீழே கடையும் நடத்தி வருகிறார்பவராகும் உள்ளனர்.

வேலையை முடிந்த பின் அஜய் வீட்டுக்கு வந்தாலும், எந்நேரமும் கிரிக்கெட் பார்ப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் கதாப்பாத்திரம், நடிகை அபினயாவும் கடையிலேயே முழு கவனமும் செலுத்துவதால், சாதன்யா மீது அக்கறை இல்லாமலேயே இருவரும் இருக்கிறார்கள். இதனால் சாதன்யா, தான் தனிமையாக இருப்பதாக உணர்ந்து மிகவும் மன உழச்சலுக்கு ஆளாகிறால். இந்நிலையில் ஒரு நாள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு இளைஞர், நல்ல மழை பெய்துகொண்டிருப்பதால் தன்னை தன் வீட்டில் விடும்படி சாதன்யாவிடம் உதவி கேட்பது போல் நடிக்கிறான். சாதன்யாவும் உதவுவதாக கூறி அவனுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறாள்.

ஆனால், அந்த இளைஞனோ, சிறுமி சாதன்யாவை மறைவான இடத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துவிடுகிறான். பின்னர் இது காவல் துறைக்கு தெரிய வர, உதவி ஆணையர் கிஷோர், அந்த காம கொடூரனனிடமிருந்து சாதன்யாவை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கிறார். பின்னர், அவளது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கிப்படுகிறது.

அதன் பின் அந்த சிறுமி சாதனாவுக்கு ஏற்பட்ட நிலை என்ன? அவளது பெற்றோர்கள் சாதனாவை எவ்வாறு பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள்? ஊடகங்கள் இந்த சம்பவத்தை எப்படி அணுகுகிறது? சட்டம் அந்த குற்றவாளிக்கு என்ன தீர்ப்பை வழங்கியது? இதுபோல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எந்த வகையான மருத்துவம் கொடுக்கவேண்டும் என்பன போன்ற பல விஷயங்களை மிகவும் வலியுடன் சொல்லியிருக்கும் திரைப்படம்தான் ‘நிசப்தம்’.

இயக்குநர் மைக்கெல் அருண் இப்படத்தை பற்றி கூறியபோது:-

“ பாலியல் துன்புறுத்தலுக்களுக்கு உள்ளான சிறுமிகளின் செய்திகளை நாம் ஒரு சம்பவமாக பார்த்துவிட்டு சென்றுவிடுகிறோம். இது மாதிரியான சம்பவங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது.

ஆதனால், இது இனி நடக்காமல் இருப்பதற்கு நாம் தான் நம்முடைய குழந்தைகளை மிக கவனமாக கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளேன், இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தபிறகு, அச்சிறுமிக்கும், குடும்பத்துக்கும் ஏற்படும் கஷ்டங்களையும் இந்த படத்தில் மிக தெளிவாக பதிவு செய்துள்ளேன் என்று நம்புகிறேன்.

இது போன்ற பதிவுகளால் இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு தங்களுடைய குழந்தைகள் மீதுள்ள அக்கறை, கவனிப்பும் மேலும் அதிகரிக்கும் என்பது மட்டும் நிச்சயம் உறுதி”. என்று கூறியுள்ளார்.

எஸ்.ஜே.ஸ்டாரின் ஒளிப்பதிவு படத்தில் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசிக்கும் வண்ணம் உதவியிருக்கிறது. எந்த இடத்திலும் சிறூ பிசிறு கூட தட்டாமல் இவரது ஒளிப்பதிவு அமைந்துள்ளது என்பது மிக சிறப்பு. ஷவான் ஜசிலின் பின்னணி இசை திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்திருப்பது மேலும் சிறப்பு. கதைக்கு என்ன தேவையோ அதைமட்டும் கொடுத்து நிறைவை கொடுத்திருக்கிறார்.

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்காக ஓங்கி குரல் கொடுத்துள்ளது 'நிசப்தம்' திரைப்படம்

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்