விளம்பரம்
முகப்புவிமர்சனம்

சம்மர் கலகலப்புக்கு 'சரவணன் இருக்க பயமேன்' விமர்சனம் - Saravanan Irukka Bayamaen Review

  | Friday, May 12, 2017

Rating:

சம்மர் கலகலப்புக்கு 'சரவணன் இருக்க பயமேன்' விமர்சனம் - Saravanan Irukka Bayamaen Review
 • பிரிவுவகை:
  காமெடி
 • நடிகர்கள்:
  உதயநிதி ஸ்டாலின், ரெஜினா காஸன்ட்ரா, ஸ்ரீருஷ்டி டாங்கே, சூரி
 • இயக்குனர்:
  எழில்
 • தயாரிப்பாளர்:
  ரெட் ஜெயண்ட் மூவிஸ்
 • எழுதியவர்:
  எழில்
 • பாடல்கள்:
  டி.இமான்

தனது திரையுலக பயணத்தில் தல,தளபதி ஆகியோரை இயக்கிய இயக்குநர் எழில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறும் வளர்ந்து வரும் கதாநாயகர்களுடனும் இணைந்து திரைப்படங்கள் இயக்கி அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது அவர் கூட்டணி அமைத்திருப்பது இளம் நடிகர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுடன். சென்ற வருடம் மனிதன் போன்ற சிறந்த படங்களுக்கு பிறகு நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்த உதய்க்கு இவ்வருடத்தின் முதல் படம் வெளிவந்துள்ளது 'சரவணன் இருக்க பயமேன்'.

கதைக்களம் மற்றும் விமர்சனம்

வழக்கமான இயக்குநர் எழிலின் ஃபார்முலா தான் ஆனால் இப்படத்தில் நகைச்சுவையுடன் கலந்து ஆவிக்கும் சான்ஸ் கொடுத்திருக்கிறார், கிராமத்தில் எந்த வேலைக்கும் போகாத இளைஞன் அவருடன் நான்கு நண்பர்கள் ஊருக்குள் பெரிய மனுஷன் என்ற பெயரில் காமெடி கலந்த அடாவடி அரசியல்வாதி, இந்த இரு கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதல் ஏன்? எதற்காக? என்பதே படத்தின் முழு கதையும்.

இப்படத்தின் துவக்கத்திலேயே ஒரு கட்சி பிரிவதற்கு வைத்துள்ள காரணம் சம கால தமிழக அரசியலை பற்றி பேசுவது போல் லைட்டாக தெரிந்தாலும் அதையும் காமெடியாகவே சொல்லியுள்ளனர். படம் துவங்கும் போதும் முடியும் பொது காலத்திற்கு தேவையான அருமையான இரண்டு படலங்கள், இரண்டும் வெவ்வேறு சிச்சுவேஷனில், அதிலும் குறிப்பாக படத்தின் முதல் பாடலான 'எம்புட்டு இருக்கு ஆசை உன் மேல' பாடல் கோடை காலத்தில் வந்துருந்தாலும் மிகவும் ஜில்லுனு எடுக்கப்பட்டுள்ளது, இறுதியாக 'லாலா கடை சாந்தி பாடல்' பலே பலே.

திரைப்படம் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டு இருந்தாலும் கதாநாயகிக்கு தேன்மொழியென்றே பெயர் வைத்திருந்தாலும் செம மாடர்னாக உள்ளார். துபாய் ரிட்டர்ன்ஸ் 'புஷ்பா புருஷன்' புகழ் சூரி, மன்சூர் அலி கான், சாம்ஸ், ராஜசேகர், லிவிங்ஸ்டன், ஜாங்கிரி மதுமிதா,ரோபோ ஷங்கர், ரவிமரியா, மனோபாலா, யோகி பாபு, அஷ்வின் ராஜா, குரைஷி, ஜி.எம். குமார் என நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை.

ஸ்ருஷ்டி டாங்கே பாத்திமா என்ற கதாப்பாத்திரத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் அழகாக ரசிகர்களின் மனதில் பதித்துவிட்டு சென்றுள்ளார். வழக்கமான இயக்குநரின் ரசனையிலேயே இப்படத்தின் ஒளிப்பதிவும் மிக கலர் ஃபுல்லாக உள்ளது, கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ஆனந்த் லிங்ககுமார் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

இசை அமைப்பை இமான் செம்மையாக செய்துள்ளார், இவ்வருடத்தின் ரொமான்டிக் சாங் மற்றும் குத்துப்பாட்டு பகுதிகளில் 'எம்புட்டு இருக்கு ஆசை ', 'லாலா கடை' பாடல்களுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இப்படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலினே இப்படத்தையும் தயாரித்துள்ளார்.

மொத்தத்தில் இந்த கோடை விடுமுறைக்கு கலகலப்பாக இருக்க செம மசாலா கலந்த திரைப்படம் 'சரவணன் இருக்க பயமேன்'.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்