முகப்புவிமர்சனம்

பாலின பாகுபாடு! மௌனம் கலைக்கும் “சிகை” - சிகை விமர்சனம் - "Sigai" Movie Review

  | Tuesday, January 08, 2019

Rating:

பாலின பாகுபாடு! மௌனம் கலைக்கும் “சிகை” - சிகை விமர்சனம் -
 • நடிகர்கள்:
  கதிர், மீரா நாயர், ரித்விகா, ராஜ் பரத், ராஜேஷ் ஷர்மா, மயில் சாமி
 • இயக்குனர்:
  ஜகதீசன் சுப்பு
 • தயாரிப்பாளர்:
  விக்னேஷ் லோகு
 • பாடல்கள்:
  ரான் யோகா

சென்னையில் வறுமை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு கஸ்டமர்களை பிடித்துக்கொடுக்கும் புரோக்கர் வேலையை வேறு வழி இன்றி செய்யும் ஒருவனின் வாழ்க்கையை அவன் செய்யும் தொழிலே மாற்றுகிறது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கை ஒருவரால் கொள்ளப்படுகிறார். இறந்த அந்த பெண்ணின் குடும்பத்தை அதே திருநங்ககை பார்த்துக்கொள்கிறார்.

உடலளவில் ஆணாக இருந்தாலும் உணர்வுகள் ரீதியாக பெண்ணாக உணரும் ஒருவரை இந்த சமூகம் எப்படியெல்லாம் புறக்கணிக்கிறது. தன் கனவனை மட்டுமே நேசிக்கும் ஒரு பெண்ணிற்கு துரோகம் செய்யும் ஆணாதிக்க மன நிலையில் கனவன் எழுப்பும் கேள்விக்கு அந்த மனைவி எவ்வாறு பதிலலிக்கிறார். வெவ்வேறு திசையில் இருக்கும் இந்த நான்கு பேரும் எப்படி கதையோடு பயணிக்கிறார்கள் என்பதுதான் படம் சொல்லும் கதை.

தொழிளில் ஈடுபட்டிருக்கும் பெண் எப்படி திருநங்கையை சந்திக்கிறார். அந்த பெண்ணை ஏன் திருநங்கை கொலை செய்கிறார். அவர் சந்திப்பதற்கு யார் காரணம். இறந்த பெண்ணின் குடும்பத்தை பிறகு யார் கவனித்துக்கொள்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இரவு முழுவதும் சென்னையின் முக்கிய இடங்களை சுற்றியவாரே படம் தொடங்குகிறது. விடிந்ததும் பிரசாத் (ராஜ் பரத்) வீட்டிலிருந்து கதை துவங்குகிறது. ராஜ் பரத் பாலியல் தொழிலில் ஈடுபடும் புரோக்கராக வேலை செய்கிறவர். அவருக்கு ஒரு போன் கால் வருகிறது அதில் சந்தோஷ் (மால் முருகா) என்பவர் பேசுகிறார். “காலையில் உங்களை சந்தித்தேன். இன்று இரவு ஏதாவது ஏற்படு செய்யமுடியுமா” என்று கேட்கிறார். இருங்கள் நான் கூப்பிடுகிறேன் என்று போனை கட் செய்யும் ராஜ் பிராசாத் தனக்கு தொழிலில் மூத்தவரான மலையாளி ஒருவரிடம் உன்னிடத்தில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்கிறார்.

உடனே வேண்டும் என்றால் நிம்மி தான் இருக்கிறார் அவளிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்கிறார்.

வேளச்சேரி பகுதியில் சாதாரண வீட்டில் குடியிருக்கும் இளம் பெண் நிம்மியை நோக்கி கதைக்களம் நகர்கிறது.

ஏழ்மையும் வறுமையை சூழ்ந்த அந்த வீட்டில் ஒருதாய், தம்பி, தங்கை என மூவரையும் கவனித்துக்கொள்ளும் தூனாக இருக்கிறார் நிம்மி(மீரா நாயர்).

வறுமையின் காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணாக தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

அவர் சந்தோஷ் வீட்டிற்கு செல்கிறார். அவரை டாக்சி ஓட்டுநராக இருக்கும் மயில்சாமி கொண்டு சேர்க்கிறார். இதற்கிடையில் புரோக்கராக வேலை பார்க்கும் பிரசாத்தை இந்த சமூகம் எவ்வாறெல்லாம் குத்திகாட்டுகிறது என காட்சிகள் வைக்கப்படுகிறது. பிராத்தின் நண்பராக பாலியல் தொழில் செய்யும் புவனா (ரித்விகா) வருகிறார். சஷ்தோஷும், நிம்மியும் மறுநாள் இறந்து கிடக்கிறார்கள் அவர்களை யார் கொன்றது ஏன் கொன்றார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்து லண்டனில் வேலை பார்க்கும் மதிவன்னன்(கதிர்) இந்தியாவிற்கு எப்போதாவதுதான் வருகிறார் அதுவும் அவருடைய நண்பர் சந்தோஷை சந்திப்பதற்காக.

மதிவன்னனும், சந்தோஷும் வீட்டில் இருக்கும் போது நிம்மி வருகிறார். மதிவன்னனுக்கு நிம்மி அங்கு இருப்பது பிடிக்கவில்லை. நிம்மியிடம் நான் உடலால் ஆண் உன்னை போலவே எனக்கு பெண் தன்மை இருக்கிறது. செக்ஸ் மட்டும்தான் உணர்வா ? என்கிற கேள்விகளோடு நான் சந்தோஷை விரும்புகிறேன் அவனுக்கு நான் இருக்கிறேன் நீ சென்று விடு என்கிறார்.

நிம்மியோ நான் இந்த விஷயத்தை சந்தோஷிடம் சொல்கிறேன் என முற்படும் போது கோபத்தில் நிம்மியயை தாக்குகிறார்மதிவன்னன். இதில் நிம்மி இறந்து போகிறார். மறுநாள் காலையில் இந்த விஷயம் சந்தோஷிற்கு தெறிய வருகிறது தன் காதலை சந்தோஷை ஏற்றுக்கொள்ள செல்லி விவாதிக்கிறார்.

சிறு வயதில் இருந்தே என்ககு இந்த மாற்றம் இருந்தது எங்கு நான் சொன்னால் நீ என்னை விட்டு பிரிந்து விடுவாய் என்று பயந்தேன். என்னை புரிந்து கொள் என்று கெஞ்சுகிறார். அந்த தருனத்தில் சந்தோஷ் கீழே விழுகிறார் தலையில் அடிப்பட்டு அவரும் இறந்து விடுகிறார்.

நிம்மியை காணவில்லை என்று பிரசாத்தும், மயில்சாமியும் தேடுகிறார்கள் நிம்மியும், சந்தோஷும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் இந்த செய்தியை அறிந்து என்ன செய்வது என்றே தெரியாமல் திரிகிறார்கள். கதைகளம் விறுவிறுப்பாக நகர்கிறது.

இதற்குள் நிம்மியோடு தொடர்பில் இருக்கும் இன்னெருவரின் குடுமபக்கதை வருகிறது. அவருக்கும் நிம்மியின் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் அவரையும் பாலியல் தொழிலில் இருந்து இன்னொருவரையும் போலீஸ் கைது செய்கிறது.

இந்த கொலையை யார் செய்தார் என்பதை பிராத் கண்டுபிடிக்கிறார். மதிவன்னன் நடந்த உன்மைகளை சொல்கிறான். சில நாட்கள் கடந்து நிம்மியின் வீட்டை முழு பெண்ணாக மாறி மதிவன்னன் பார்த்துக்கொள்கிறான்.

கதை எந்த இடத்திலும் நம்மை திசைத்திருப்ப வில்லை. பாலியல் தொழில் ஈடுபடும் பெண்ளை ஏலனமாக பார்க்கும் சமூகம் அவர்களின் வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் துன்பங்களையும் சற்று பார்க்க வேண்டும் என்பதை அழகாக கூறியிருக்கிறார்.. அவர்கள் வேண்டுமென்றே இந்த தொழிலுக்கு வருவதில்லை இந்த சமூகம் எதற்காக பணத்தை வாரி இறைக்கிறது என்று அழுத்தமாக “பொண்ணுங்க உடம்புக்கு தானடா காச வாரி இறைக்கிறீங்க” என்கிற வசனங்கள் கவனிக்க வைக்கிறது.

உணர்வு ரீதியாக பெண்ணாக இருக்கும் ஒருவரை என்னவெல்லாம் சொல்லி இந்த சமூகம் புறம் தள்ளுகிறது, அவர்கள் இந்த சமூகத்தில் சந்திக்கும் பிரச்னை என்ன என்பதையும் இயக்குனர் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

மதிவன்னன் நிம்மியை கொலை செய்யும் காட்சியை தவிற்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

தனி மனிதனுக்கு எவ்வாறு தான் விரும்பும் வாழக்கையை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறதோ அதே உரிமை அவனுடைய பாலினத்தை தீர்மானிக்கவும் உரிமை இருக்கிறது என்பதை ஆழமாக பதிவு செய்கிறது “சிகை”.

நிம்மியாக மீரா நாயர் தனக்கான கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கலக்கி இருக்கிறார். சிறிய சிறிய காட்சிகளில் வந்தாலும் பேசும் பெருளாக வளம் வருகிறார் ரித்விகா. எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை சவாலாகவே ஏற்று தன்னுடைய திறமையை வெளிபடுத்தி இருக்கிறார் கதிர். சமூகம் புறம் தள்ளும் முக்கிய பிரச்னையை பேசு பொருளாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுப்பு அவருக்கு வாழ்த்துக்கள்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்