முகப்புவிமர்சனம்

ஒரு நாய்! ஒரு போலீஸ்!! ஒரு திருடன்!!! – வாச்மேன் விமர்சனம்

  | Saturday, April 13, 2019

Rating:

ஒரு நாய்! ஒரு போலீஸ்!! ஒரு திருடன்!!! – வாச்மேன் விமர்சனம்
 • பிரிவுவகை:
  த்ரில்லர் டிராமா
 • நடிகர்கள்:
  ஜி.வி.பிரகாஷ், சம்யுக்தா, யோகி பாபு
 • இயக்குனர்:
  ஏ.எல்.விஜய்
 • தயாரிப்பாளர்:
  அருண் மொழி
 • பாடல்கள்:
  ஜி.வி.பிரகாஷ்

செல்ல பிராணிகளை மய்யப்படுத்தி பல்வேறு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டு அந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நேற்று வெளியான “வாச்மேன்” படமும் இடம் பெற்றிருக்கிறது.
 
ஜி.வி.பிரகாஷ், சம்யுக்தா இருவரும் காதலிக்கிறார்கள். பெற்றோர்களின் ஒப்புதலோடு இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார்கள். அதன் படி இரு வீட்டாரும் பேசி நாளை நிச்சயம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவாகிறது. ஆனால் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே செய்த வேலை தோல்வி அடைந்து அதில் ஏற்பட்ட கடன் அவருக்கு பெரும் தொல்லையாக வந்து நிற்கிறது. ஒரே நாளில் இந்த கடனை அடைத்து விடுகிறேன் என்று வாக்கு கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ் பணம் கிடைக்காததால் நல்ளிரவில் ஒரு வீட்டில் திருட முயற்சிக்கிறார்.

 
6ukbtgeo

 
அந்த வீட்டில் அவருக்கு ஒரு பெரிய பிரச்னை காத்திருக்கிறது. அந்த பிரச்னையை அவர் எப்படி எதிர்கொள்கிறார். அவருக்கு பணம் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.
 
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி நல்ல எதார்த்த நடிகராக பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து கவணம் பெறுகிறார்.இவரோடு இன்னொரு கதாநாயகனாக ப்ரூனோ என்கிற நாய் ஜி.வி.பிரகாஷின் நடிப்பையும் கடந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
 
7n63gsng

 
படம் தொடங்கியதில் இருந்தே எதிர்பார்ப்பும், பரபரப்பும் நிறைந்த காட்சிகள் இடம்பெறுகிறது. இரவு,பகல் என்று அடிக்கடி கதையில் இருந்து விலகி போவதுபோல் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். அது இந்த படத்தின் ஸ்வாரஸயத்தை குறைக்கிறது.
 
trrclhf

 
திருடச்சென்ற வீட்டில் இருக்கும் ப்ரூனோ என்கிற நாய்தான் தியேட்டரில் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்க்கிறது. தன்னுடைய முதலாளிக்கு ஏற்படும் ஆபத்தை பரூனோ தடுக்கும் காட்சிகளால் கைதட்டல்களையும் பாராட்டுகளையும் பெறுகிறது.
 
ஜி.வி.பிராகஷின் நண்பனாக வரும் யோகி பாபு, அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக எப்போதும் போல் தனது இயல்பான நடிப்பையும், நகைச்சுவையான கவுண்டர்களையும் கொடுத்து பெரிய அளவில் அவரது காமெடி எடுபடவில்லை என்றாலும்.அவ்வப்போது ஆசுவாசப்படுத்துகிறார். 
பாடல்கள் இல்லாத படம். அதே நேரத்தில் ஜி.வி.யின் பின்னணி இசை படத்தை பதட்டமாகவே வைத்துக்கொள்ள உதவுகிறது. அந்தந்தக் காட்சிக்கு தேவையான பதற்றத்தை பின்னணியில் கொடுத்து அதிர வைக்கிறார். நீரவ் ஷாவோட ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. இருட்டின் அடர்த்தியை நீரவ் ஷாவின் கேமரா அழகாகப் படம் பிடித்துள்ளது.
 
uq5udqug

 
கதாநாயகிக்கு முக்கியத்துவம்வாய்ந்த படம் இல்லை என்று தெரிந்தே சம்யுக்தா இந்த படத்தை நடித்து கொடுத்திருக்கிறார். இது ஜி.வி.பிரகாஷிற்கும் பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன். வில்லனாக வரும் ராஜ் அர்ஜுன் பார்ப்பதற்கு டெரராக இருக்கிறார். தீவிரவாதி கதாபாத்திரத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்துகிறார்.
 
பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய முதலாளியை காப்பாற்றும் செல்லபிராணிகள் கதைகள் பல வந்திருக்கின்றன. தொழில் நுட்பங்கள் வளர்ந்திருக்கும் இனறைய சூழலில், சமூகத்தில் பாதுகாப்பற்ற இத்தகைய சூழலில் இன்னும் சற்று நேர்த்தியாகக்கூட படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கலாம் என்று தோன்றியது.
 
0ps94o08

 
ஒரு இரவு ஒரு போலீஸ் ஒரு திருடன் என்று கதைக்குள் எந்த இடத்திலும் நம்மால் தொடர்பு படுத்திக்கொள்ள முடியாத அளவிற்கு திரைக்கதை நகர்கிறது. மொத்தத்தில்  “வாச்மேன்” ஒரு நாய் ஒரு போலீஸ் ஒரு திருடனோடு முடிந்து விடுகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்