விளம்பரம்
முகப்புவிமர்சனம்

தாக்கத்தை ஏற்படுத்த "யாக்கை" தவறவில்லை - திரைப்பட விமர்சனம்

  | Friday, March 03, 2017

Rating:

தாக்கத்தை ஏற்படுத்த
 • பிரிவுவகை:
  மெடிக்கல் க்ரைம்
 • நடிகர்கள்:
  கிருஷ்ணா, சுவாதி, பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தரம், ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, ஹரி கிருஷ்ணா
 • இயக்குனர்:
  குழந்தை வேலப்பன்
 • தயாரிப்பாளர்:
  முத்துக்குமரன்
 • எழுதியவர்:
  குழந்தை வேலப்பன்
 • பாடல்கள்:
  யுவன் ஷங்கர் ராஜா

இயக்குநர் குழந்தை வேலப்பன் ஆண்மை தவறேல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். திரில்லர் வகையை சேர்ந்த இப்படம் 2011ம் ஆண்டு வெளிவந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரில்லர் என்ற அதே கயிற்றினை பிடித்து எழும்ப முயற்சி செய்திருக்கும் திரைப்படம் தான் "யாக்கை"

ஒரு கொலையை சுற்றி பின்னப்பட்ட திரைக்கதை

தமிழ் சினிமாவில் தற்பொழுது க்ரைம் திரில்லர் வகை படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது, காரணம், திரையரங்கில் திரைப்படத்தை காணும் அந்த இரண்டு மணி நேரம் நாம் நம்மை மறந்து வேறொரு இடத்திற்கு நம்மை அழைத்து செல்லும் திறன் க்ரைம் வகை கதைகளுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.

ஒரு சம்பவம், அந்த சம்பவத்தை சுற்றி நடந்த காரண காரியங்களை ஆராயும் ஒரு போலீஸ் ஆய்வாளர் குழு இவை தான் தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெரும்பாலான க்ரைம் திரில்லர் திரைப்படங்கள், ஆனால் படத்தின் மையக்கரு, கதாபாத்திர வடிவமைப்பு, திரைக்கதை வடிவமைப்பு இது போன்ற ஒரு சில கூறுகள் தான் ஒவ்வொரு படத்தினையும் வித்தியாசப்படுத்தி காட்டுகின்றது, மேலும் இந்த விஷயங்கள் தான் படத்தின் வெற்றியையும் தீர்மானிக்கின்றது. இந்த மூன்று விஷயங்களில் ஏதேனும் ஒன்று சற்று தடுமாற்றம் அடைந்தாலும் அது பார்வையாளர்களுக்கும் ஏதேனும் ஒரு ஏமாற்றத்தினை கொடுத்து விடும்.

தற்பொழுது பெரும்பாலான இயக்குநர்கள் பல அடுக்கு திரைக்கதை முறையை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் வெளிவரவந்திருக்கும் திரைப்படம் தான் "யாக்கை". படத்தின் டைட்டில் கார்ட் போடும் பொழுதே நம்மை திரைக்கதைக்குள் அழைத்து செல்கின்றார் இயக்குனர். சென்னை மாநகரில் உள்ள ஒரு மிகப்பெரிய மருத்துவமனை கட்டிடத்தின் மேல் நின்றுகொண்டிருக்கும் ஒரு காரில் இருந்து திரைக்கதை பயணிக்கின்றது. அந்த காரின் உள்ளே இறந்த நிலையில் இருக்கும் ராதாரவியை யாரோ ஒருவர் மேலிருந்து கீழே தள்ளி விடுகின்றார்.

படத்தின் தொடக்க காட்சியும், சப்த அமைப்புகளும் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு வித பதற்றத்தினை ஏற்படுத்தி நம்மை கதையை நோக்கி நகர்த்துகின்றன. அதன் பிறகு, ராதாரவி எப்படி இறந்தார் என்பதை கண்டறியும் பணியில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஈடுபடுத்தபடுகின்றார். தன்னுடைய தந்தை இறந்ததை அறிந்து அமெரிக்காவில் இருக்கும் ராதாரவியின் மகனான குரு சோமசுந்தரம் சென்னை வருகின்றார். தன்னுடைய தந்தையை கொன்றவனை பழிவாங்க தனியாக தேடுதல் வேட்டையில் இறங்குகின்றார் குரு சோமசுந்தரம்.

மற்றொரு புறம் கோயம்பத்தூரில் உள்ள பிரபல கல்லூரியில் கிருஷ்ணா படித்து வருகிறார் அதே கல்லூரியில் படித்துவரும், அனைவரின் மீதும் அக்கறையுடனும், சமூகத்தின் மீது அன்பும் கொண்ட சுவாதியை பார்த்த உடனே அவள் மீது காதல் வசப்படுகின்றார் கிருஷ்ணா.

ராதாரவி ஏன் கொல்லப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? ராதாரவியின் மகனான குரு சோமசுந்தரம் கொலையாளியை தனியாக தேடுவதன் காரணம் என்ன? சென்னையில் நடந்த அந்த சம்பவத்தில் கோயம்பத்தூரில் உள்ள கதாநாயகனும், கதாநாயகியும் எப்படி சம்மந்தப்படுத்தப்பட்டுள்ளனர்? என்பதை போலீஸ் அதிகாரியான பிரகாஷ் ராஜ் எவ்வாறு கண்டறிகின்றார் என்பது தான் கதை.

போலீஸ் அதிகாரியாக கச்சிதமாக பொருந்தியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரகாஷ் ராஜுடன் இருக்கும் சிங்கம் புலியை ஏனோ இயக்குநர் பயன்படுத்த தவறிவிட்டார். பல இடங்களில் நடிகர் குரு சோமசுந்தரம் அவர்களின் நடிப்பு நம்மை எரிச்சல் அடையவைக்கின்றது. கிருஷ்ணாவின் தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ் பாஸ்கர், நண்பர்களாக வரும் மெல்வின், ஹரிகிரிஷ்ணா சில காட்சிகளில் வந்தாலும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

காற்றில் நடக்க வைக்கும் யுவனின் இசை

யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய இருபது வருட திரைவாழ்க்கையை நிறைவு செய்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில் வெளிவரவிருக்கும் திரைப்படம் "யாக்கை" என்பதால் இப்படத்தின் இசை கண்டிப்பாக அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் தனுஷ் பாடியிருக்கும் "சொல்லித்தொலையேமா" பாடல் கேட்பதற்கு மட்டுமில்லாமல் திரையிலும் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. "நான் இனி காற்றில்" பாடலில் கிருஷ்ணா, சுவாதியின் காதல் காட்சிகள் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையின் மூலம் நம்முடைய காதல் நினைவுகளை மீட்டெடுக்கின்றது.

படத்தின் தொடக்க காட்சியின் மூலம் கவனம் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார், படத்தின் படத்தொகுப்பினை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். ப்ரிம் பிக்சர்ஸ் சார்பாக முத்துக்குமரன் இப்படத்தினை தயாரித்துள்ளார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்