விளம்பரம்
முகப்புவிமர்சனம்

மருத்துவ கல்வி கொள்ளையை குறிவைக்கும் 'எய்தவன்' விமர்சனம் - Yeidhavan Review

  | Thursday, May 11, 2017

Rating:

மருத்துவ கல்வி கொள்ளையை குறிவைக்கும் 'எய்தவன்' விமர்சனம் - Yeidhavan Review
 • பிரிவுவகை:
  ஆக்ஷன் கிரைம்
 • நடிகர்கள்:
  கலையரசன், சட்னா திட்டூஸ், வேலா.ராமமூர்த்தி
 • இயக்குனர்:
  சக்தி ராஜசேகரன்
 • தயாரிப்பாளர்:
  அபி இளங்கோவன்,சுதாகரன்
 • எழுதியவர்:
  சக்தி ராஜசேகரன்
 • பாடல்கள்:
  பார்த்தவ் பார்கவ்

தமிழக சினிமா உலகில் பல கதைக்களங்களில் கண்களுடைய கற்பனை திறனால் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டு பெரும் வகையில் திரைப்படங்களை உருவாக்கி இருந்தாலும், தற்போது நடக்கும் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி அல்லது சமூக அக்கறை சார்ந்த படங்கள் உருவாக்கம் என்பது மிகக்குறைவாக தான் உள்ளது அதற்கு கரணம் வணிகரீதியில் அது போன்ற திரைப்படங்கள் வெற்றி அடைவதில்லை எனபது தான்.

வெற்றிகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு தங்கள் சொல்லும் கருத்துக்கள் இந்த சமூகத்தில் ஏதாவது ஒரு சின்ன மாற்றத்தையோ அல்லது நற்சிந்தனையையோ புகுத்த வேண்டும் எண்பத்தி லட்சியமாக கொண்டு திரைப்படங்களை உருவாக்குபர்கள் அது தயாரிப்பாளர்களாகட்டும் அல்லது இயக்குநர்களாகட்டும் பெருகி வருகின்றனர்

அந்த வரிசையில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் 'எய்தவன்'.

கதைக்களம் மற்றும் விமர்சனம்:-

பெற்றோர்கள் தங்கை என அழகான குடும்பத்துடன் சராசரி இளைஞனாக வாழ்கிறார் இப்படத்தின் கதாநாயகன் கலையரசன், தான் தங்கை மருத்துவ படிப்பு படிக்க ஆசைப்பட பல இடங்களில் கடன் வாங்கி ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்க்க அந்த கல்லூரியோ எந்த ஒரு வசதிகளும் இல்லாததால் மருத்துவ கல்லூரிக்கான அனுபதி இவ்வருடம் கிடைக்காமல் போக கதாநாயகன் குடும்பம் உட்பட 60 க்கும் மேற்பட்ட மாணவர்களின் குடும்பமும் அதிர்சிக்குள்ளாகிறது.

இக்கதை ஒரு புறம் நடக்க காசுக்காக எதையும் செய்யும் கூட்டத்தின் தலைவனை கொலை செய்ய துடிக்கும் மருத்துவ கல்லூரி முதலாளியின் மகன், அவரை கொலை செய்ய நினைக்கும் கதாநாயகன் என கதை சுற்றி வருகிறது.

ஏன் கதாநாயன் அந்த மருத்துவ கல்லூரி முதலாளியின் மகனை கொலை செய்ய திட்டமிட வேண்டும், அந்த கொள்ளை கூட்டத்தலைவனை ஏன் கல்லூரி முதலாளியின் மகன் கொலை செய்ய திட்ட மிட வேண்டும் என்பதற்கான விடையை அழகாக திரையில் கூறியுள்ளார் இயக்குநர்.

ஒளிப்பதிவு:-

பிரேம்குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணியினை மேற்கொண்டுள்ளார், மிக நேர்த்தியாக உள்ளது, படத்திற்க்கான கலர் டோன் உட்பட அனைத்தையும் சிறப்பாக கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர்.குறிப்பிட்டு சொல்லும்படி எந்த ஒரு காட்ச்சி அமைப்பும் இல்லாவிட்டாலும் படத்திற்கு ஒளிப்பதிவு பகுதியில் தேவையான அனைத்தும் இப்படத்தில் உள்ளது.

படத்தொகுப்பு:-

ஐ.ஜெ.அலென் இப்படத்தின் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார் எந்த ஒரு இடத்திலும் பிசுறு தட்டமால் படத்தொகுப்பு பணியினை செம்மையாக செய்துள்ளார், படத்தில் அங்கு அங்கு நமக்கு தொய்வு ஏற்பட்டாலும், எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் படத்தை தொகுத்து உள்ளார்.

இசை :-

பார்த்தவ் பார்கவ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் உண்மையில் இவர் தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம் என்றே கூறலாம் பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார், நிச்சியம் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தயாரிப்பு: -

தயாரிப்பாளர் சுதாகரனுடன் இணைந்து அபி இளங்கோவன் தயாரித்துள்ளனர் இது போன்ற கதையம்சத்தை தேர்தெடுத்து தயாரித்தமைக்கு இருவருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள்.

இயக்கம்: -

தன்னுடைய முதல் படத்திலேஏ இது போன்ற கதைகளை தேர்தெடுத்ததற்கு இயக்குநர் சக்தி ராஜசேகரனுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள், திரைக்கதையில் அதிகம் கவனம் செலுத்திருக்க வேண்டும் , கதை தலை சுற்றி மூக்கை தொடுவது போல் உள்ளது, சில இடங்களில் வசனங்களும் அடிவாங்குகிறது,சில காட்சிகள் தேவையில்லாமல் இழுக்கிறது, இவை அனைத்திலும் கவனம் செலுத்தி அடுத்து இதை போலவே நல்ல கதையை இயக்க வேண்டும்.

நடிகர்கள்:-

கலையரசன், சட்னா திட்டூஸ், வேலா.ராமமூர்த்தி உட்பட அனைத்து நடிகர்களும் தங்களுக்குரிய கதாப்பாத்திரத்தை சரியாக செய்துள்ளனர் என்றே கூறலாம்.

சமீபத்தில் நடந்த ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கி இருந்தாலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்த துறைக்கு படிக்க அனுப்புவதற்கு முன் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை எய்தவன் திரைப்படம் நமக்கு கூறுகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்