விளம்பரம்
முகப்புகேலரி

துருவங்கள் பதினாறு தேங்க்ஸ் மீட்

March 14, 2017 12:07
 1. 01

  சென்ற வருடத்தின் இறுதியில் வெளியான திரைப்படம் துருவங்கள் பதினாறு

 2. 02

  இப்படத்தினை இளம் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார்

 3. 03

  முழுக்க முழுக்க இளம் பட்டாளம் உருவாக்கியிருந்த இத்திரைப்படத்தில் நடிகர் ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்

 4. 04

  இப்படத்தில் நடிகர் ரகுமான் அவர்களை தவிர அனைவரும் புதுமுகங்களாகவே நடித்திருந்தனர்

 5. 05

  தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பல நாட்கள் கடந்து ஓடிய திரைப்படம் துருவங்கள் பதினாறு திரைப்படம் தான்

 6. 06

  இப்படத்தின் 75 வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கு விழா முன்னணி ஸ்டுடியோவில் நடைபெற்றது

 7. 07

  இந்த விழாவில் இயக்குனர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மேலும் பலர் கலந்துகொண்டனர்

 8. 08

  இவ்விழா குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறும் பொழுது நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு விருது வழங்கும் விழா தமிழ் திரையுலகில் நடைபெறுகின்றது என்று தெரிவித்தார்

 9. 09

  இயக்குனர் கெளதம் மேனன் அவர்கள் இவ்விழாவில் பங்கெடுத்து பேசும் பொழுது, இப்படத்தினை எடுப்பதற்கு முன் கார்த்திக் நரேன் என்னுடைய ரசிகர் ஆனால் இப்பொழுது நான் கார்த்திக் நரேனின் ரசிகர் என்று கூறினார்

 10. 10

  கார்த்திக் நரேன் அடுத்து இயக்கவிருக்கும் "நரகாசூரன்" திரைப்படத்தினை இயக்குனர் கெளதம் மேனன் தயாரிக்கவிருக்கிறார்

முக்கியமானவை


விளம்பரம்
விளம்பரம்