முகப்புகேலரி

த்ரிஷா கலந்துகொண்ட குழந்தை உழைப்பு எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்வின் புகைப்பட கேலரி

June 12, 2018 11:29
 1. 01

  குழந்தை உழைப்புக்கு எதிரான தினம் இன்று (ஜூன் 12)

 2. 02

  அனைத்து விதமான குழந்தை தொழிலாளர் முறையையும் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக யுனிசெஃப், சென்னையில் ஊர்வலம் நடத்தியது.

 3. 03

  மேலும் கையெழுத்து பரப்புரையும் நடத்தப்பட்டது

 4. 04

  பிரபல தென்னிந்திய நட்சத்திரமும், யுனிசெஃப் நல்லெண்ணத் தூதுவருமான த்ரிஷா இதற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

 5. 05

  இந்த நிகழ்வில் கலந்து கொண்ட த்ரிஷா, "எளிதில் சுரண்டப்படக்கூடியவர்களாக குழந்தைகள் இருப்பதால், அவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

 6. 06

  இதனால் ஏற்படும் பாதிப்புகள், அவர்களின் மேம்பாட்டை வெகுவாக பாதிக்கும். இதை மாற்றும் ஒரே மந்திரம் கல்வி மட்டுமே.

 7. 07

  எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்பான, நலமான, வளமான எதிர்காலத்தைத் தரும் கல்வியைக் கொடுக்கும் பள்ளிகளில் இருக்க வேண்டும்" எனக் கூறினார்.

 8. 08

  தமிழக தொழிலார் நலத்துறை குழந்தைத் தொழிலாளர் அற்ற தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது.

 9. 09

  2001ம் ஆண்டு தமிழகத்தில் 4,18,801 என்கிற எண்ணிக்கையில் இருந்த குழந்தை தொழிலாளர்கள், 2011ல் 1,51,437 ஆக குறைந்திருக்கிறார்கள்.

 10. 10

  இதில் தமிழ்நாடு, கேரள யுனிசெஃப் தலைவர் ஜோப் ஜக்காரியாவும் கலந்து கொண்டார்.

 11. 11

  "குழந்தை உழைப்புக்கு என்பது ஒரு அப்பட்டமான உரிமை மீறல்.

 12. 12

  குழந்தைகள் பள்ளி செல்லுதல், கற்றல், விளையாடுதல் என அனைத்தையும் இந்த முறை கொள்ளை அடிக்கிறது.

 13. 13

  இவர்கள் புறக்கணிக்கப்படுவதால் வன்முறை மற்றும் பல தீங்குகளுக்கு உள்ளாகின்றனர்" எனக் கூறினார் ஜோப் ஜக்காரியா.

 14. 14

  2025க்குள் அனைத்து விதமான குழந்தை உழைப்பு முறையையும் ஒழிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்