முகப்புகேலரி

விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிக்கும் ராட்சசன் இசை வெளியீட்டு விழா படங்கள்

September 26, 2018 15:35
 1. 01

  'முண்டாசுப்பட்டி' படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷால் - ராம்குமார் இணைந்திருக்கும் படம் `ராட்சசன்'. மேடையில் பேசிய விஷ்ணு, "இந்தப் படம் பலபேருக்கு போனாலும் கடைசியில் என்கிட்டே வந்தது சந்தோசம். அடுத்த படமும் ராம் கூட சேர்ந்து பண்ணலாம்னு கேட்டேன். கண்டிப்பா பண்ணலாம்னு சொன்னார். ஆனா, அடுத்ததா தனுஷ் சார் படம் பண்றார்" எனப் பேசினார்.

 2. 02

  இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். "இந்தப் படத்தில் நடிக்கும் போதிருந்தே படம் எப்போது ரிலீஸாகும் ரொம்ப ஆவலாக காத்திருக்கேன்" எனப் பேசினார் அமலா பால்.

 3. 03

  ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

 4. 04

  முண்டாசுப்பட்டியில் நடித்திருந்த காளிவெங்கட் இப்படத்திலும் நடித்துள்ளார்.

 5. 05

  டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 6. 06

  இப்படத்தை அக்டோபர் 5ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

விளம்பரம்
விளம்பரம்