முகப்புடோலிவுட்

நாகர்ஜுனாவிற்கு ஜோடியான ஆகங்க்ஷா சிங்

  | April 13, 2018 15:31 IST
Nagarjuna Next Film

துனுக்குகள்

  • நாகர்ஜுனா, நானி இருவரும் இணைந்து தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றனர்
  • இதில் நாகர்ஜுனா டானாக வலம் வரவுள்ளாராம்
  • நானிக்கு ஜோடியாக ராஷ்மிகா மான்டேனா நடித்து வருகிறார்
டோலிவுட்டில் பிரபல நடிகர்களான நாகர்ஜுனா, நானி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கி வருகிறார். இதனை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதற்கு மணிஷர்மா இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாகர்ஜுனா டானாகவும், நானி டாக்டராகவும் நடிக்கின்றனர். நானிக்கு ஜோடியாக ராஷ்மிகா மான்டேனா நடித்து வருகிறார்.

தற்போது, நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக நடிக்க ஆகங்க்ஷா சிங் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் & டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்