முகப்புடோலிவுட்

விஷால் Vs அர்ஜுன் - ‘அபிமன்யுடு’ படத்தின் மிரட்டலான டீஸர்

  | January 05, 2018 17:09 IST
Abhimanyudu Movie Teaser

துனுக்குகள்

  • விஷாலுக்கு எதிராக மிரட்டலான வில்லன் வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்
  • டோலிவுட்டிலும் விஷாலுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது
  • தெலுங்கு வெர்ஷன் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டுள்ளனர்
கோலிவுட்டில் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், விஷாலுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விஷாலுக்கு டோலிவுட்டிலும் நல்ல மார்க்கெட் உள்ளதால், படத்தை தெலுங்கிலும் ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் டப் செய்கின்றனர்.
 

தற்போது, படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டுள்ளனர். இந்த டீஸர் விஷாலின் டோலிவுட் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.

    தொடர்புடைய விடியோ

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்