முகப்புடோலிவுட்

அந்த நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல உயிரை விட்ட ரசிகன்…..

  | January 09, 2019 18:41 IST
Actor Yash

துனுக்குகள்

  • யஷ் நடித்து வெற்றிகரமாக வெளியான படம் KGF
  • தமிழிலும் அவர் நடித்த கே,ஜி,எஃப் நல்ல வரவேற்பை பெற்றது
  • தெலுங்குலகில் மாஸ் ஹீரோவாக வளம் வருகிறவர் இவர்
நடிகர் யஷ் நடித்து வெளிவந்த படம் 'கே.ஜி.எஃப்.'. இந்த படம் நல்ல விமர்சனத்தையும் வெற்றியையும் பெற்றது. தமிழிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த யஷ் தெலுங்கில் பிரபல நடிகர் அம்பரீஷ் அண்மையில் இறந்ததால்  யஷ் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை.
 
இதனால் மனமுடைந்த ரவி என்ற ரசிகர் யஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 70 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது யஷ் வருவாரா, அவரை பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார் ரவி. இறுதியில் யஷ் வந்தபோது அவரை பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். அதன் பிறகு ரவி இறந்துவிட்டார். ரவியின் மறைவால் யஷ் மிகுந்த மனவேதனையில் உள்ளார். இருக்கின்ற வேலைகளை விட்டு இது போன்ற விபரீத முடிவுகள் எடுக்கும் அளவிற்கு சினிமா பிறபலங்களை நேசிக்கம் மக்கள் அதிகம் வாழும் இடமாக இந்தியா இருப்பது ஒரு பக்கம் வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது என பலர் தெரிவித்து வருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்