முகப்புடோலிவுட்

அகிலுடன் இணைந்து நடித்த பிரியா பிரகாஷ் வாரியர்

  | October 03, 2018 13:30 IST
Akhil Akkineni

துனுக்குகள்

  • ‘மிஸ்டர் மஜ்னு’ படத்தில் அகிலுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்
  • ‘சவுத் இந்தியா ஷாப்பிங் மால்’-க்கான விளம்பர படத்தில் அகில் நடித்துள்ளார்
  • இதில் ‘ஒரு அடார் லவ்’ பட புகழ் பிரியா பிரகாஷ் வாரியரும் நடித்துள்ளார்
டோலிவுட்டில் ‘அகில்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில். இதனையடுத்து ‘மனம்’ புகழ் விக்ரம்.கே.குமார் இயக்கிய ‘ஹலோ’ படத்தில் அகில் நடித்திருந்தார். தற்போது, அகில் கைவசம் வெங்கி அட்லுரியின் ‘மிஸ்டர் மஜ்னு’ மற்றும் ராம் கோபால் வர்மா படம் என 2 படங்கள் உள்ளது.
 
இதில் ‘மிஸ்டர் மஜ்னு’ படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ நிறுவனம் சார்பில் BVSN.பிரசாத் தயாரிக்கிறார். இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், அகில் ஒரு தெலுங்கு விளம்பர படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சவுத் இந்தியா ஷாப்பிங் மால்’-க்கான இந்த விளம்பர படத்தில் அகிலுடன் இணைந்து ‘ஒரு அடார் லவ்’ எனும் மலையாள பட புகழ் பிரியா பிரகாஷ் வாரியரும் நடித்துள்ளார். இதை அகிலே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதோடு, இவ்விளம்பர படத்தையும் ஷேரிட்டுள்ளார். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்