முகப்புடோலிவுட்

அகிலின் புதிய படத்தை கிளாப் அடித்து துவங்கி வைத்த நாகர்ஜுனா

  | March 27, 2018 10:54 IST
Akhil Akkineni

துனுக்குகள்

  • இப்படத்தை ‘தொலி ப்ரேமா’ புகழ் வெங்கி அட்லுரி இயக்கவுள்ளார்
  • இதன் ஷூட்டிங்கை மே மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்
  • தமன் இசையமைக்கவுள்ள இதற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்
டோலிவுட்டில் ‘அகில்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில். இதனையடுத்து ‘மனம்’ புகழ் விக்ரம்.கே.குமார் இயக்கிய ‘ஹலோ’ படத்தில் அகில் நடித்திருந்தார். தற்போது, அகில் நடிக்கவிருக்கும் புதிய படத்தை ‘தொலி ப்ரேமா’ புகழ் வெங்கி அட்லுரி இயக்கவுள்ளார்.

தமன் இசையமைக்கவுள்ள இதற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ நிறுவனம் சார்பில் BVSN.பிரசாத் இதனை தயாரிக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நேற்று (மார்ச் 26-ஆம் தேதி) போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகர்ஜுனா கிளாப் அடித்து, துல்கர் சல்மான் கேமராவை ஆன் செய்து படத்தின் முதல் ஷாட் படமாக்கப்பட்டது. ஷூட்டிங்கை மே மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்