முகப்புடோலிவுட்

அடவான்ஸாக வரும் அல்லு அர்ஜுனின் 'NSNI'

  | February 14, 2018 13:35 IST
Allu Arjun Naa Peru Surya Naa Illu India

துனுக்குகள்

  • இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் நல்ல வரவேற்பை பெற்றது
  • முதலில் படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த
டோலிவுட்டில் ஹரிஷ் ஷங்கரின் ‘துவ்வாடா ஜெகந்நாதம்’ (DJ) படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அல்லு அர்ஜுன் கைவசம் வக்கந்தம் வம்சியின் ‘நாபேரு சூர்யா நா இல்லு இந்தியா’ மற்றும் இயக்குநர் லிங்குசாமியின் புதிய படம் உள்ளது. இதில் ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ படத்தில் ஸ்டைலிஷ் ஸ்டாருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், முக்கிய வேடங்களில் ‘சூப்பர் ஹீரோ’ சரத்குமார், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், தாகூர் அனுப் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். விஷால் – ஷேகர் இணைந்து இசையமைத்து வரும் இதற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ராமலக்ஷ்மி சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் 2 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. முதலில் படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, அட்வான்ஸாக ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 26-ஆம் தேதியே இப்படம் ரிலீஸாகவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்