முகப்புடோலிவுட்

சிரஞ்சீவியின் `சே ரா நரசிம்ஹா ரெட்டி' படப்பிடிப்பில் விரைவில் இணையும் அமிதாப்

  | February 20, 2018 16:55 IST
Sye Raa Narasimha Reddy Cast

துனுக்குகள்

  • சிரஞ்சீவியின் 151வது படமாக உருவாகிறது 'சே ரா நரசிம்ஹா ரெட்டி'
  • சுதந்திர போராட்ட நரசிம்ஹா ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது படம்
  • இதில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்
`கைதி நம்பர் 150' படத்துக்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படம் `சே ரா நரசிம்ஹா ரெட்டி'. இது சிரஞ்சீவியின் 151வது படம். `கிக்', `ரேஸ் குர்ரம்', `துருவா' போன்ற படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார்.

அமிதாப் பச்சன், ஜகபதி பாபு, சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா எனப் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். திடீரென கிளம்பிய சில கிசுகிசுக்களில் அமிதாப் பச்சன் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார் என்ற செய்தி பரவியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, படத்தின் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி அமிதாப்பை சந்தித்து வந்திருக்கிறார்.

படத்தில் சிரஞ்சீவி கதாபாத்திரமான நரசிம்ஹா ரெட்டிக்கு குருவான கோசை வெங்கண்ணா கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் அமிதாப் பச்சன். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் பிப்ரவரி 23லிருந்து ஹைதிராபாத்தில் துவங்குகிறது. அன்றிலிருந்து அமிதாப்பும், நயன்தாராவும் படக்குழுவில் இனைவார்கள் என சொல்லப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்