முகப்புடோலிவுட்

வெங்கடேஷின் 'F2' படத்தில் இணைந்த 3-வது நாயாகி

  | May 18, 2018 14:12 IST
Venkatesh

துனுக்குகள்

  • அணில் ரவிபுடி இயக்கவிருக்கும் புதிய படம் ‘F2’ (Fun & Frustration)
  • வெங்கடேஷ், வருண் தேஜ் இணைந்து நடிக்கவுள்ளனர்
  • ஷூட்டிங்கை வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்
டோவிவுட்டில் ரவி தேஜாவின் ‘ராஜா தி கிரேட்’ படத்திற்கு பிறகு இயக்குநர் அணில் ரவிபுடி இயக்கவிருக்கும் புதிய படம் ‘F2’ (Fun & Frustration). டபுள் ஹீரோ சப்ஜெக்டான இதில் ‘விக்டரி’ வெங்கடேஷ், ‘மெகா பிரின்ஸ்’ வருண் தேஜ் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இப்படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னாவும், வருண் தேஜ்ஜுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடாவும் நடிக்கவிருக்கின்றனர். இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

ஷூட்டிங்கை வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை அனுசுயா பரத்வாஜ் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்