முகப்புடோலிவுட்

ராக்ஸ்டாருடன் கைகோர்த்த ஆண்ட்ரியா

  | November 13, 2017 10:44 IST
Devi Sri Prasad

துனுக்குகள்

  • ‘பாரத் அனே நேனு’ மகேஷ் பாபுவின் கேரியரில் 24-வது படமாம்
  • இதற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ படத்திற்கு பிறகு மகேஷ் பாபு கால்ஷீட் டைரியில் கொரட்டால சிவாவின் ‘பாரத் அனே நேனு’, எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் வம்சி இயக்கவுள்ள புதிய படங்கள் என அடுத்தடுத்து படங்கள் இருக்கிறது. இதில் ‘பாரத் அனே நேனு’ படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், சரத்குமார், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இதனை ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒரு பாடல் பாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2018) ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்