முகப்புடோலிவுட்

நானி படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

  | September 06, 2018 12:17 IST
தெலுங்கில் மெர்லபாக காந்தியின் ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ படத்துக்கு பிறகு ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவதாஸ்’. ஸ்ரீராம் ஆதித்யா இயக்கி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இதனைத் தொடர்ந்து நானி கால்ஷீட் டைரியில் உள்ள படம் ‘ஜெர்சி’.

ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் தயாராகவிருக்கும் இப்படத்தை கெளதம் டின்னானுரி இயக்கவுள்ளார். இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சனு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.
 
இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்கு இசையமைக்க ‘ராக்ஸ்டார்’ அனிருத் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அனிருத்தே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்