முகப்புடோலிவுட்

விஜய் தேவரகொண்டா படத்தில் 'துப்பறிவாளன்' நாயகி

  | May 25, 2018 15:03 IST
Vijay Deverakonda

துனுக்குகள்

  • விஜய் தேவரகொண்டா கைவசம் நான்கு படங்கள் உள்ளது
  • இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ராஷ்மிகா மான்டேனா நடிக்கவுள்ளார்
  • இதனை ‘கீதா ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது
‘மகாநதி’ (தமிழில் ‘நடிகையர் திலகம்’) படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா கைவசம் ‘டாக்ஸிவாலா, நோட்டா, Dear Comrade’ என மூன்று படங்கள் உள்ளது. இதனையடுத்து ‘ஸ்ரீரஸ்து சுபமஸ்து’ பட இயக்குநர் பரசுராம் இயக்கவிருக்கும் புதிய தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கிறார்.

இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ராஷ்மிகா மான்டேனா டூயட் பாடி ஆடவுள்ளார். தற்போது, இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகை அனு இம்மானுவேல் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை ‘கீதா ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். வெகு விரைவில் படத்தின் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்