முகப்புடோலிவுட்

எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய அனுஷ்காவின் ‘பாகமதி’ டிரையிலர்

  | January 09, 2018 12:12 IST
Bhaagamathie Movie Trailer

துனுக்குகள்

  • இதிலும் ‘பாகுபலி’ போல அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம்
  • ஒரே நேரத்தில் தமிழ் & தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகுகிறது
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் நல்ல வரவேற்பை பெற்றது
எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘பாகமதி’ (BHAAGAMATHIE). ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஜி.அசோக் என்பவர் இயக்கி வருகிறார். முக்கிய வேடங்களில் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத், பிரபாஸ் ஸ்ரீனு, தன்ராஜ், முரளி ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

தமன் இசையமைத்து வரும் இதற்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘UV கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதுவும் தமிழ் சினிமாவில் டிரெண்டு அடித்துக் கொண்டிருக்கும் ஹாரர் ஜானராம். இந்த படத்திலும் ‘பாகுபலி’ போல அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம்.
 

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரையிலரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்