முகப்புடோலிவுட்

சீனாவில் படப்பிடிப்பு துவங்கும் 'சைரா நரசிம்ஹா ரெட்டி' டீம்

  | March 19, 2018 12:47 IST
Sye Raa Narasimha Reddy

துனுக்குகள்

  • இது சிரஞ்சீவியின் கேரியரில் 151-வது படமாம்
  • முக்கிய வேடங்களில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் நடிக்கின்றனர்
  • சீனாவில் சில முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளனர்
தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் சரித்திர படம் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’. இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இது சிரஞ்சீவியின் கேரியரில் 151-வது படமாம். மெகா ஸ்டாருடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘KONIDELA புரொடக்ஷன் கம்பெனி’ நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். சமீபத்தில், துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது, அடுத்த கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சீனா செல்லவிருக்கிறது படக்குழு. அங்கு படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை சீனாவிலும் ரிலீஸ் செய்ய சிரஞ்சீவி திட்டமிட்டுள்ளாராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்