முகப்புடோலிவுட்

ரிலீஸாகி 6 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் டப் செய்யப்பட துல்கர் சல்மான் படம்!

  | September 05, 2018 14:42 IST
Dulquer Salmaan

துனுக்குகள்

  • 2012-ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் ‘உஸ்தாத் ஹோட்டல்’
  • இதில் முக்கிய வேடத்தில் திலகன் நடித்திருந்தார்
  • இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது
மலையாளத்தில் 2012-ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் ‘உஸ்தாத் ஹோட்டல்’. இந்த படத்தை அன்வர் ரஷீத் என்பவர் இயக்கியிருந்தார். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நித்யா மேனன் டூயட் பாடி ஆடியிருந்தார்.

மேலும், முக்கிய வேடத்தில் திலகன் நடித்திருந்தார். கோபி சுந்தர் இசையமைத்திருந்த இதற்கு லோகநாதன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரவீன் பிரபாகர் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார், அஞ்சலி மேனன் ஸ்க்ரிப்ட் எழுதியுள்ளார். இதனை ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனம் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. தற்போது, இந்த படத்தை தெலுங்கில் ‘ஜனதா ஹோட்டல்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்