விளம்பரம்
முகப்புடோலிவுட்

பிரம்மாண்ட செட்டில் படமாகும் 'பரத் அனே நேனு' பட பாடல்

  | March 12, 2018 13:48 IST
Bharat Ane Nenu

துனுக்குகள்

  • மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது
  • பிரம்மாண்ட செட்டில் ஒரு ஸ்டைலிஷ் பாடல் படமாக்கப்படுகிறது
ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ படத்திற்கு பிறகு மகேஷ் பாபு கால்ஷீட் டைரியில் கொரட்டால சிவாவின் ‘பாரத் அனே நேனு’, எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் வம்சி இயக்கவுள்ள புதிய படங்கள் என அடுத்தடுத்து படங்கள் இருக்கிறது. இதில் ‘பாரத் அனே நேனு’ படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். மேலும், சரத்குமார், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இது மகேஷ் பாபுவின் கேரியரில் 24-வது படமாம். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் மகேஷ் பாபு முதலமைச்சராக வலம் வரவுள்ளாராம். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு ரவி.கே.சந்திரன் - திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கின்றனர், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் & மகேஷ் பாபு ஆந்திர மாநில முதலமைச்சராக தெலுங்கு மொழியில் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் ஆடியோ பதிவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, படத்தில் இடம்பெறும் ஒரு ஸ்டைலிஷ் பாடலை ஹைதராபாத்தில் போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபு, கியாரா அத்வானி டூயட் பாடி ஆடும் இப்பாடலுக்கு ராஜுசுந்தரம் நடனம் அமைக்கிறாராம். படத்தை வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்