முகப்புடோலிவுட்

"எனது தயாரிப்பில் உருவாகும் படங்களில் நடிக்கமாட்டேன்" பிரபல நடிகர் அறிவிப்பு

  | February 15, 2018 15:05 IST
Nani Interview

துனுக்குகள்

  • நானி தயாரித்த முதல் படம் ‘D FOR DOPIDI’
  • தற்போது, ‘AWE’ எனும் படத்தை நானி தயாரித்துள்ளார்
  • நேற்று மாலை தனது ரசிகர்களுடன் ஃபேஸ்புக் லைவ்வில் நானி பேசினார்
பிரபல தெலுங்கு நடிகர் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தயாரித்த முதல் படம் ‘D FOR DOPIDI’. இதனையடுத்து ‘AWE’ எனும் புதிய படத்தை நானி தயாரித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரஷாந்த் வர்மா என்பவர் இயக்கியுள்ளார். இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ஸ்ரீநிவாஸ், ரெஜினா, ஈஷா, முரளி ஷர்மா, ரோகினி, தேவதர்ஷினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதாம்.

படத்தில் வரும் மீனுக்கு நானியும், மரத்திற்கு ரவி தேஜாவும் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளனர். மார்க்.கே.ராபின் இசையமைத்துள்ள இதற்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார், கெளதம் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர், தீம் பாடல் மற்றும் டிரையிலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை நாளை (பிப்ரவரி 16-ஆம் தேதி) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 14-ஆம் தேதி) மாலை தனது ரசிகர்களுடன் ஃபேஸ்புக் லைவ்வில் நானி பேசுகையில் “எனது தயாரிப்பில் உருவாகும் படங்களில் நான் நடிக்கப்போவதில்லை என திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளேன். திறமையுடன் வரும் கலைஞர்களை ஊக்கவிப்பதற்காகவே தான், நான் படங்கள் தயாரிக்கிறேன். நல்ல ஸ்க்ரிப்ட் வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் என்னை அணுகலாம், நான் தயாரிக்க ரெடி” என்று நானி தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்