விளம்பரம்
முகப்புடோலிவுட்

இசைப்புயலுக்கு பதில் இசைஞானியா?

  | February 12, 2018 13:42 IST
Sye Raa Narasimha Reddy Cast

துனுக்குகள்

  • இது சிரஞ்சீவியின் 151-வது படமாம்
  • முக்கிய வேடங்களில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் நடிக்கின்றனர்
  • முதலில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டது
தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் சரித்திர படம் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’. இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இது சிரஞ்சீவியின் 151-வது படமாம்.

மெகா ஸ்டாருடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘KONIDELA புரொடக்ஷன் கம்பெனி’ நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சமீபத்தில், துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெறுகிறது. இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். முதலில் இந்த படத்திற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. பின், சில காரணங்களால் அவர் விலகினார். தற்போது, படத்திற்கு இசையமைக்க ‘இசைஞானி’ இளையராஜாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்