முகப்புடோலிவுட்

நிச்சயதார்த்தை கேன்சல் செய்தாரா ராஷ்மிகா மந்தனா?

  | September 10, 2018 13:10 IST
Rashmika Mandanna

துனுக்குகள்

  • க்ரிக் பார்டி மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா
  • கீதா கோவிந்தம் படம் மூலம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளார்
  • நிச்சயதார்த்தத்தை கேன்சல் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது
சமீபத்தில் வெளியான 'கீதா கோவிந்தம்' படம் மூலம் மிகப் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக அந்தப் படத்தில் இடம் பெற்ற இங்கேம் இங்கேம்பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பையும், அதில் நடித்திருந்த ராஷ்மிகாவுக்கு தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது.

கன்னடத்தில் வெளியான `க்ரிக் பார்டி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா. அதே படத்தி ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டிக்கும் ராஷிமிகாவுக்கும் காதல் உண்டாக, 2017 ஜூலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு டாக் ஆஃப் த டவுன் இந்த ஜோடிதான். இடையிடையி இருவரின் நிச்சயதார்த்தம் முறிக்கப்பட்டது என வதந்திகள் சுற்றியபடியே இருந்தது.

ஆனால், தற்போது நிஜமாகவே இவர்களின் நிச்சயதார்த்தம் முறிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி வருகிறது. சினிமாவில் அதிக கவனம் செலுத்தப் போவதால் ராஷ்மிகா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இது குறித்து தனது குடும்பம் மற்றும் நண்பர்களிடம் கலந்து பேசிய பிறகே இந்த முடிவிற்கு வந்திருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்