முகப்புடோலிவுட்

20 நிமிட காட்சியில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இவ்வளவு சம்பளமா?

  | October 12, 2018 14:10 IST
Rakul Preet Singh

துனுக்குகள்

  • பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார்
  • இதில் நடிகை ஸ்ரீதேவியின் கேரக்டரில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்
  • இதன் முதல் பாகமான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’வை ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடவுள்ள
டோலிவுட்டில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார். இந்த படத்தை க்ரிஷ் இயக்கி வருகிறார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 103-வது படமாம். இதில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதியும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கேரக்டரில் ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கிறார்களாம். இதற்கு ‘பாகுபலி’ புகழ் எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகுமாம்.

இதன் முதல் பாகமான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’வை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 9-ஆம் தேதியும், 2-ஆம் பாகமான 'என்.டி.ஆர் மஹாநாயகுடு'வை ஜனவரி 24-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இப்படத்தில் 20 நிமிடம் மட்டுமே ஸ்ரீதேவி கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது. இதற்கே ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரூ.1 கோடி சம்பளமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்