முகப்புடோலிவுட்

ஹைதராபாத்தில் துவங்கிய ஜூனியர் என்.டி.ஆரின் புதிய பட ஷூட்டிங்

  | April 13, 2018 11:20 IST
Jr Ntr 28

துனுக்குகள்

  • ஜூனியர் என்.டி.ஆர் கைவசம் இரண்டு படங்கள் உள்ளது
  • இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்
  • தமன் இசையமைக்கும் இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்
டோலிவுட்டில் ‘ஜெய் லவ குசா’ படத்திற்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் கைவசம் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கவிருக்கும் புதிய படங்கள் உள்ளது. இதில் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ள படத்தை ‘ஹாரிகா &ஹாசினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இது ஜூனியர் என்.டி.ஆரின் கேரியரில் 28-வது படமாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே டூயட் பாடி ஆடவுள்ளார். தமன் இசையமைக்கும் இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில், படத்திற்கான பூஜை போடப்பட்டது. தற்போது, படத்தின் ஷூட்டிங் இன்று (ஏப்ரல் 13-ஆம் தேதி) முதல் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்