விளம்பரம்
முகப்புடோலிவுட்

ட்ரெண்டாகி வரும் ஜுனியர் என்.டி.ஆரின் ‘ஜெய் லவ குசா’

  | May 19, 2017 16:45 IST
Jr Ntr New Film

துனுக்குகள்

  • ஜூனியர் என்.டி.ஆர் முதன் முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடிக்கிறார்
  • பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அட்வான்ஸ் ட்ரீட் கொடுத்துள்ளார்
  • நிவேதா தாமஸ், ராஷி கண்ணா என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்
டோலிவுட்டில் ‘ஜனதா கேரேஜ்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜெய் லவ குசா’. இதில் ‘யங் டைகர்’ ஜூனியர் என்.டி.ஆர் முதன் முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்து வருகிறார். அதிலும் ஒரு வேடம் நம்மை மிரட்டப்போகும் வில்லனாம். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ், ராஷி கண்ணா என இரண்டு நாயகிகளாம். மேலும், பிரம்மாஜி, பிரதீப் ராவத், ஜெயப்பிரகாஷ் ரெட்டி, ஹம்சா நந்தினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஜூனியர் என்.டி.ஆரின் 27-வது படமான இதனை ‘என்.டி.ஆர். ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் கல்யான் ராம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வரும் இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு சோட்டா.கே.நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில் ‘ஸ்ரீ ராம நவமி’யை முன்னிட்டு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை நாளை (மே 20-ஆம் தேதி) ஜூனியர் என்.டி.ஆரின் பர்த்டேவை முன்னிட்டு அட்வான்ஸ் ட்ரீட்டாக வெளியிட்டுள்ளது ‘ஜெய் லவ குசா’ டீம். இப்போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரல் ட்ரெண்டு அடித்து வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்ஸ் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்