விளம்பரம்
முகப்புடோலிவுட்

Jr.NTR ட்ரிபிள் ஆக்ஷனில் அசத்தும் ‘JLK’ டிரையிலர்

  | September 11, 2017 10:18 IST
Jai Lava Kusa Trailer

துனுக்குகள்

  • இது ஜூனியர் என்.டி.ஆரின் 27-வது படமாம்
  • இதில் ஜூனியர் என்.டி.ஆர் ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்துள்ளார்
  • இதன் பாடல்கள் மற்றும் டீஸர்கள் செம லைக்ஸ் குவித்தது
டோலிவுட்டில் ‘ஜனதா கேரேஜ்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜெய் லவ குசா’. இதில் ‘யங் டைகர்’ ஜூனியர் என்.டி.ஆர் முதன் முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்துள்ளார். இது ஜூனியர் என்.டி.ஆரின் 27-வது படமாம். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ், ராஷி கண்ணா என இரண்டு நாயகிகளாம். யங் டைகருக்கு எதிராக நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் ‘அக்லி, உடான்’ புகழ் பாலிவுட் நடிகர் ரோனித் ராய் நடித்துள்ளார்.

மேலும், பிரம்மாஜி, பிரதீப் ராவத், ஜெயப்பிரகாஷ் ரெட்டி, ஹம்சா நந்தினி மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘என்.டி.ஆர். ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் கல்யாண் ராம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இதனை கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு சோட்டா.கே.நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ளார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட பாடல்கள் மற்றும் ‘ஜெய் – லவ குமார் - குசா’ கேரக்டர் டீஸர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் அசத்தலான டிரையிலரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற செப்டெம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது ‘ஜெய் லவ குசா’ டீம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்